SPIRITUAL

இயேசு அறையப்பட்ட சிலுவை இங்கிருக்கு... தென்னகத்தின் கல்வாரியில் இவ்வளவு சிறப்புகளா...

இயேசு அறையப்பட்ட சிலுவை இங்கிருக்கு... தென்னகத்தின் கல்வாரியில் இவ்வளவு சிறப்புகளா... நீலகிரியின் ஒரு முக்கியமான ஆன்மிக இடம் “குருசடி” திருத்தலம். உலகத்தில் இந்த இடம் ஒரு முக்கியமான இடம் என்பது பலருக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது. ஊட்டி நகரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் காந்தல் என்ற பகுதியின் கடைக்கோடி இடத்தில் அமைதியான சூழ்நிலையில் குருசடி என்ற ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் முக்கியத்துவமே இங்கு வீற்றிருக்கும் பிரமாண்டமான சிலுவையும் மற்றும் ஏசு கல்வாரி மலையில் சுமந்து சென்ற சிலுவையின் ஒரு சிறிய துண்டு இந்த ஆலயத்தில் சிலுவை வடிவில் வைத்திருப்பதும் தான். 1939ஆம் ஆண்டு மே 3ஆம் நாள் ஏசு சுமந்து சென்ற உண்மையான சிலுவையின் ஒரு பகுதியை வாட்டிகனின் இந்தியத் தூதர் இந்த திருத்தலத்தை நிறுவிய குரு பால் கிரேஸாக் என்பவரிடம் ஒப்படைத்து, இந்த ஆலயத்தில் கட்டப்பட்ட குகைக் கோவிலில் ஒரு சிலுவைனுள் பொருத்திப் புனிதப்படுத்தி வைத்தனர். அந்த மே மாதம் 3ஆம் தேதி குருசடி திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. இதையும் படிங்க: Christmas Celebration: கிறிஸ்துமஸ் குடிலில் இடம்பெறும் பொம்மைகள்… பின்னணி என்ன தெரியுமா… இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் வருகை புரிகின்றனர். இந்த ஆலயத்தில் முன் பகுதியில் உள்ள சிலுவை வழக்கமாக பிரான்ஸ் நாட்டில் கல்லறைத் தோட்டங்களில் நடுவில் பெரிய சிலுவை வைப்பது சகஜம் அதுபோலவே இங்கேயும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் குகைக் கோவில், தண்ணீர் ஊற்றுகள், இயேசு ஜெபிப்பது போன்ற சிலை ஆகியவையும் சிறப்பாக அமைந்து. மேலும் இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதுகுறித்து உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில், “ஊட்டியில் இந்த பகுதி பல ஆலயங்களைக் கொண்டுள்ளது. முன்பொரு காலகட்டத்தில் செங்காந்தள் மலர்கள் அதிகமாக வளர்ந்ததால் காந்தல் என பெயர் பெற்றுள்ளது. தற்போது மறதி திருகாந்தல் என பெயரோடு உள்ளது. இதையும் படிங்க: School Holiday Latest Announcement: பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.24 விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு… தென்னகத்தின் கல்வாரி என அழைக்கப்படும் புகழ் பெற்ற இந்த திருத்தளம் குருஸ் மலைக்கு மாலை அணிந்து செல்ல முடியாதவர்களும் இந்த ஆலயத்திற்கு வருகின்றனர். இந்த ஆலயம் 1884ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. அதற்கு முன்னதாகவே ஒரு குழுவினர் இங்கு தங்கி உள்ளதாக தற்பொழுது அது குறித்து ஆய்வுகளும் நடந்து வருகிறது. மேலும், இந்த ஆலயத்தின் சிறப்பாக ரோம் நகரில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட அந்த சிலுவையின் ஒரு துண்டு இங்கு கொண்டுவரப்பட்டு ஒரு சிலரின் நடுவில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள ஒவ்வொரு சிலைகளுக்கும் ஒவ்வொரு வரலாறுகள் உண்டு. குருசடி திருவிழாவில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெறும். இந்த ஆலயம் அமைந்திருப்பது இந்த பகுதிக்கு மேலும் ஒரு சிறப்பு” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.