SPIRITUAL

இன்று உருவாகிறது மகாபாக்ய யோகம்... இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் தான்!

வேத ஜோதிடத்தின்படி, சந்திரன் மட்டுமே வேகமாக நகரும் கிரகமாக உள்ளது. சந்திரன் இரண்டரை நாட்கள் மட்டுமே ஒரு ராசியில் இருப்பார். இதன் காரணமாக பல கிரகங்களுடன் இணைந்து சந்திரன் சேர்க்கையை உருவாக்குகிறது. சந்திரனின் இந்த சேர்க்கையால் சுப, அசுப யோகங்கள் உருவாகும். வேத சாஸ்திரத்தின்படி, இன்று (டிசம்பர் 17) மாலை 6.47 மணிக்கு சந்திரன் கடக ராசிக்குள் நுழைந்து வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை அங்கேயே இருக்கும். ஏற்கனவே செவ்வாய் கிரகமானது கடக ராசியில் பிற்போக்கு நிலையில் இருக்கிறது. இத்தகைய சூழலில், இந்த செவ்வாய்-சந்திர சேர்க்கை சிலருக்கு பயனுள்ளதாக இருக்கும். டிசம்பர் மாதத்தில் செவ்வாய், சந்திரன் சேர்க்கை ஏற்படுவதால் மகாபாக்யம் என்ற ராஜயோகம் உருவாகிறது. இது செவ்வாய்-சந்திரன் இணைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகம் அமைவதால், மக்கள் நிதி ஆதாயத்துடன் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மகாபாக்ய யோகத்தினால் பலன் பெறப்போகும் ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம். மேஷம்: குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது முடிவுக்கு வரலாம். இந்த காலகட்டத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். வசதிகள் பெருகும். கனவுகளும் லட்சியங்களும் நனவாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்க வாய்ப்புள்ளது. சிம்மம்: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை ஒன்பதாம் வீட்டில் நடக்கும். இந்த நேரத்தில் பல புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற முடியும். நிறைய பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் செய்யும் திட்டங்களின் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம். குருவின் முழு ஆதரவையும் பெறுவார்கள். கன்னி: செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கை பதினொன்றாம் வீட்டில் நடைபெறும். இத்தகைய சூழலில் இந்த ராசிக்காரர்களுக்கு மகாபாக்ய யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். கடின உழைப்பின் பலனை இப்போது நீங்கள் அறுவடை செய்வார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும். இதையும் படிக்க: புத்தாண்டில் அரசு வேலை கிடைக்கும் யோகம்… எந்த ராசியனருக்கு தெரியுமா? பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொது தகவல்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டவை. இவை உண்மை என்பதற்கான எந்த அறிவியல் சான்றுகளும் இல்லை. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. நியூஸ் 18 தமிழ்நாடு இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.