SPIRITUAL

தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்கதர்கள் கவனத்திற்கு... புதிய ரூட் இதுதான்... காவல்துறை முக்கிய அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோயில் சீசன் துவங்கியதால் தேனி மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வழிப்பாதை தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயில். இங்கு எதிர் வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதற்காக பிரதான வழித்தடமான தேனி மாவட்டம் குமுளி மலைச் சாலையை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் சாலை மார்க்கமாக வருகின்ற பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழகம் கேரளாவை இணைக்கும் குமுளி மலைச் சாலையில் உண்டாகும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று (டிசம்பர் 20) முதல் எதிர் வரும் 2025 ஜனவரி 15 ஆம் தேதி வரை போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.அதன்படி இன்று முதல் தேனி மாவட்டத்தில் சபரிமலை செல்லும் வழித்தடம் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம்மெட்டு வழியாக ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்கயம், எரிமேலி மற்றும் பம்பை செல்ல வேண்டும். அதே போல சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி வழியாக கூடலூர், கம்பம் என தேனிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் மலைச் சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக இருப்பதால் பனிமூட்டம், மழைப்பொழிவு போன்ற வானிலை தொடர்பான அறிக்கைகளை அறிந்து பக்தர்கள் விழிப்புடன் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் படிக்க: ஆன்மீக அதிசயங்கள்.. உலகின் டாப் 7 இடங்கள் இதோ.. எங்கெல்லாம் இருக்கு தெரியுமா? இதற்காக கம்பம் பகுதியில் உள்ள கம்பம் மெட்டு பிரிவு மற்றும் கூடலூர் அருகே உள்ள குமுளி மலைச் சாலைகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை செல்லும் வாகனங்களை கம்பம் மெட்டு மலைச் சாலை வழியாக பயணிக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் புதிய வழித்தடம் குறித்த நோட்டீஸ்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.