SPIRITUAL

Ayya Vaikundar: கண்ணாடி முன் நின்று கடவுளை வழிபடும் மக்கள்... விஷ்ணுவின் அவதாரமான வைகுண்டரின் வரலாறு...

கண்ணாடி முன் நின்று கடவுளை வழிபடும் மக்கள்... விஷ்ணுவின் அவதாரமான வைகுண்டரின் வரலாறு... உலகில் தற்போது வரை பல மதங்கள் தோன்றி வளர்ந்துள்ளன. மேலும், பல மதங்களில் கடவுள் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாகக் கருதப்படும் அய்யா வைகுண்டர் குமரியில் தோன்றிய கடவுளாகப் பார்க்கப்படுகிறார். அய்யா வைகுண்டர் வழியில் உருவ வழிபாடு கிடையாது. கடவுள் உனக்குள் இருக்கிறார் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில், இங்கு கண்ணாடி முன் நின்று வழிபடுவது தனிச்சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதி, அய்யா வழி சமயத்தின் தலைமை பதி ஆகும். மேலும், பதிகளில் புகழ் பெற்ற பதி இதுவாகும். இப்பதியை தெட்சணாப்பதி என்றும் அழைப்பர். இந்தப் பதியானது அனைத்துச் சமயங்களைச் சார்ந்தவர்களும் வருகை தரும் முக்கியமான புனித இடம் ஆகும். இதையும் படிங்க: PAN 2.0: வெறும் 50 ரூபாய் போதும்… உங்க வீடு தேடி வரும் புது பான் கார்டு… அய்யா வைகுண்டர் தலைமை பதி குறித்து அடிகளார் பாலபிரஜாதிபதி கூறுகையில், “முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானமாக இருந்த இன்றைய கன்யாகுமரி மாவட்டத்தில் அகத்தீஸ்வரம் வட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள சாமித்தோப்பு என்னும் இடத்தில் பொன்னு நாடாருக்கும் வெயிலாளுக்கும் பிறந்தார். வைகுண்டரை கடவுள் கனவில் வந்து அவரை திருச்செந்தூர் கோவிலுக்குக் கொண்டு செல்லும்படி ஆணையிட்டதாக அகிலத்திரட்டு பாடல் சொல்கிறது. திருச்செந்தூர் கடலுக்குள் ஓரிடத்தில் மூன்று நாட்கள் தனிமையில் இருந்தார் என்றும், அங்கே அவர் மெய்ஞானம் அடைந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நாளைத் தான் அய்யா வைகுண்டர் அவதார நாள் என அய்யா வழி மரபினர் கொண்டாடுகின்றனர். திருச்செந்தூரிலிருந்து வைகுண்டர் நடந்தே சாமித்தோப்புக்கு வந்தார். பின்னர் வைகுண்டர் ஞான உரைகளை நிகழ்த்த ஆரம்பித்தார். ஏராளமான மக்கள் அவரை நாடி வந்தனர். இது உயர் சாதியினருக்குச் சமயநெறிகளின் மீறலாகத் தோன்றியது. 1837இல் வைகுண்டர் கைது செய்யப்பட்டார். இவர் சாதியக் குற்றச்சாட்டுகளாலேயே கைது செய்யப்பட்டார். இதையும் படிங்க: “உண்மையான மனிதனாக உள்ளே வாங்க“ சாதி, மத அடையாளத்திற்குத் தடா போடும் கிராம மக்கள்… சுசீந்திரத்தில் விசாரணை செய்யப்பட்டபின் வைகுண்டரை திருவனந்தபுரம் கொண்டு சென்றனர். அங்கே அவரை அரசத் துரோகியாக நடத்தினர். அவர் பலவகையான கொடுமைகளுக்கு ஆளானார். திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையான பின்பு வைகுண்டர் ஓர் ஆண்டுக் காலம் தவம் செய்தார். ஆதிக்க சாதியினரால் பல துன்புறுத்தல்களுக்கு ஆளான மக்களுக்குப் பல உதவிகளைச் செய்தார். சமூக சமநிலையை நிலை நிறுத்த அரும்பாடுபட்டார். இதனால் அவரை மக்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்தனர். வைகுண்டர் பல அற்புதங்களைச் செய்தார் என்று அகிலத்திரட்டு சொல்கிறது. அவர் காலகட்டத்திலேயே அவரை விஷ்ணுவின் அவதாரமாக மக்கள் வழிபட ஆரம்பித்துவிட்டிருந்தனர். பின்னாளில் இந்நம்பிக்கை அய்யா வழி என்னும் வழிபாட்டு மரபாக ஆகி இன்றும் நீடிக்கிறது. அவரது காலத்திற்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களால் சாமித்தோப்பில் அய்யா தலைமை பதி கட்டப்பட்டு அகிலத்திரட்டு வாசிக்கப்படுகிறது. மேலும், அனைத்து மத மக்களும் இங்கு வந்து வழிபாடு நடத்துகின்றனர்” என அவர் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.