SPIRITUAL

வீட்டில் தவறுதலாக கூட பணத்தை இந்த இடங்களில் வைக்காதீர்கள்.. வறுமை, கடன் ஏற்படுமாம்

நீங்கள் வீட்டில் பணத்தை வைத்திருக்கும் இடமும் உங்கள் நிதி நிலையை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில இடங்களில் பணத்தை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை நிலை நிறுத்துகிறது. இதன் காரணமாக வறுமை, கடன் மற்றும் அதிகப்படியான செலவுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வாஸ்து சாஸ்திரத்தின்படி எந்தெந்த இடங்களில் பணத்தை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை குறித்து ஜோதிடர் கவுரவ் தீட்சித் கூறுவ்தை விரிவாக தெரிந்துகொள்ளலாம். Also Read: 12 ராசிக்குமான இன்றைய ராசி பலன்கள்… டிசம்பர் 17, 2024 அதோடு இதனை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் செல்வமும், செழிப்பும் எப்போதும் உங்களுடன் இருக்கும். இருண்ட இடம்: வீட்டில் பணம் வைத்திருக்கும் பெட்டி அல்லது பையினை ஒரு குறிப்பிட்ட திசையில் வைக்கவேண்டும். பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதனை இருண்ட இடத்தில் வைக்கக்கூடாது. அவ்வாறு இருண்ட இடத்தில் வைத்தால், அது வீட்டில் பணத் தட்டுப்பாடு மற்றும் பணப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதேபோல், காற்று செல்லாத இடத்திலும் வைக்கக்கூடாது. ஏனெனில் அது பணப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும். வாஸ்துவின் படி, வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் பணத்தினை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டின் நிதிநிலை மேம்படும். கழிப்பறை அல்லது குளியலறை: வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் பணத்தை கழிப்பறை அல்லது குளியலறையில் வைத்திருக்க கூடாது. அது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தும். இதுபோன்ற இடங்களில் பணத்தை வைத்திருந்தால் அது நிலைக்காது என்பதுடன் வீண் செலவுகளும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதன் விளைவாக, நிதி நெருக்கடி மற்றும் பணப் பற்றாக்குறை போன்றவையும் ஏற்படும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணத்தை கழிப்பறை அல்லது குளியலறை போன்ற இடங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். தெற்கு திசை: வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு திசையில் பணத்தை வைப்பதும் தவறு. தெற்கு திசை யம ஸ்தலமாகக் கருதப்படுகிறது. எனவே இங்கு பணம் வைத்திருப்பதால், வீட்டில் வறுமை மற்றும் பணப் பற்றாக்குறை ஏற்படும். இது தவிர இந்த திசையில் பணத்தை வைத்திருப்பது நிதி நெருக்கடி மற்றும் வறுமையைக் கொண்டு வரும். இது குடும்பத்தின் மகிழ்ச்சியை கெடுக்கும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் பணத்தை வைப்பதற்கு வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகள் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த திசைகள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவை அதோடு வீட்டில் செழிப்பையும் கொண்டு வருகின்றன. இதையும் படிக்க: பறவைகள் தலையில் அமர்வது நல்ல சகுணமா? கெட்ட சகுணமா? சாஸ்திரம் கூறுவதென்ன? பொறுப்பு துறப்பு: மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடரின் கருத்துகள் மட்டுமே. நியூஸ் 18 தமிழ்நாடு இதனை உறுதிப்படுத்தவில்லை. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.