SPIRITUAL

Watch Video : அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை... ரஜினிக்கு கொலு வைத்து ரசிகர் அசத்தல்...

ரஜினிக்கு பிரம்மாண்ட கொலு வைத்த ரசிகர் -ytaபொதுவாகவே புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து, கொலு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு சிறப்பான பூஜைகள் செய்யப்படுவது என்பது வழக்கம். ஆனால் மதுரையில் வித்தியாசமாக ரஜினியின் ரசிகரான ஒருவர் ஐந்து படிகள் கொண்ட ரஜினி கொலு மண்டபத்தை தயார் செய்து உள்ளார். மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது அலுவலகத்தில் ரஜினிக்காக கோவில் ஒன்றை கட்டியிருந்த நிலையில், தற்பொழுது நவராத்திரியை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் உள்ள புகைப்படங்களை கொலு பொம்மைகள் போல் தயார் செய்து ஐந்து படிக்கட்டுகள் கொண்ட கொலு படிக்கட்டுகளை உருவாக்கியுள்ளார். ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் முதன்முதலாக 1975 ஆம் ஆண்டு நடித்த அபூர்வ ராகங்கள் படங்கள் , மூன்று முடிச்சு, 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், தர்மயுத்தம், பில்லா, முரட்டு காளை, முத்து, படையப்பா, சந்திரமுகி போன்ற படங்கள் முதற்கொண்டு தற்பொழுது நடித்துவரும் வேட்டையன், கூலி போன்ற படங்கள் ஆன 171 வகையான அனைத்துப் படங்களையும் ஒரு அடி மற்றும் ஒன்றரை அடி அளவிற்கு போஸ்டர் அடித்து தானே பொம்மைகள் போல் தயார் செய்து அதனை வரிசையாக வைத்து நவராத்திரி கொலு மேற்கொண்டு பூஜைகள் செய்து வருகின்றார். இதையும் வாசிக்க: இதய ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமா… இந்த 5 டிப்ஸ பாலோ பண்ணுங்க… மேலும் வேர்ல்ட் சூப்பர் ஸ்டார், 49 வருடம் ரஜினிஷம், அவர் ஜெனரேஷன் இஸ் ரஜினிஷம் போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் களிமண் கொண்டு படையப்பா படத்தில் வரும் ரஜினிகாந்த் ஊஞ்சலில் அமர்ந்திருப்பது போன்ற பொம்மைகளையும் செய்துள்ளார். இவரின் குடும்பம் அனைவருமே ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர்கள் என்பதினால் ரஜினி நவராத்திரி என்ற வகையில் 45 நாட்களாக இந்த கொலுவினை தயார் செய்து அமைத்திருப்பதாகவும் இதனை மற்ற ரஜினி ரசிகர்களும் பார்வையிட வருவதாகவும் கூறுகின்றார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.