SPIRITUAL

Sathuragiri: சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்... யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா...

இங்கு சுந்தர மகாலிங்கம் தவிர ஈசன் ஐந்து வகையான லிங்கமாகக் காட்சி தருகிறார். கரடுமுரடான பாதைகளைக் கடந்து வரும் பக்தர்கள் இதில் நான்கு லிங்கங்களை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேறி வரும் பக்தர்கள் வழியிலேயே இரட்டை லிங்கம், சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என நான்கு லிங்கங்களைத் தரிசித்து வரும் நிலையில், பார்க்க முடியாத அந்த ஐந்தாவது லிங்கம் எது? அதுதான் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பெரிய மகாலிங்கம். பெரிய மகாலிங்கம் என்பது பெயருக்கு ஏற்ப அளவில் பெரிய இயற்கையாக அமைந்த பெரிய பாறையே லிங்கம் போல காட்சி தருவதால் பெரிய மகாலிங்கம் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு கூடுதல் சிறப்பாக இந்த பாறையின் பின்புறம் படர்ந்துள்ள மரத்தின் வேர்கள் சிவனின் பிடரி முடி போல இருப்பதால் பக்தர்கள் இதை சிவனாகவே பார்க்கின்றனர். இதையும் படிங்க: Pongal Celebration: தமிழர் பாரம்பரிய உடையில் கலக்கிய வெளிநாட்டவர்கள்... குலவையிட்டு பொங்கல் வைத்து அசத்தல்... ஏன் அனுமதி இல்லை? கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய மகாலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்படுவது இல்லை. காரணம் இந்த பெரிய மகாலிங்கம் சதுரகிரி மலையின் உச்சிப் பகுதியான தவசிப்பாறைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தவசிப்பாறைக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், பெரிய மகாலிங்கத்திற்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. அனுமதி இல்லை எனினும், இன்றளவும் பக்தர்கள் மத்தியில் பெரிய மகாலிங்கம் பேசுபொருளாகவே உள்ளது. Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Sathuragiri: சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்... யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா... Reported by: ALAGESWARAN M Last Updated: January 05, 2025 3:36 PM IST Sathuragiri Hills: புகழ்பெற்ற சதுரகிரி மலையில் 5 லிங்கங்களாக ஈசன் அருளும் நிலையில் பக்தர்களால் 4 லிங்கங்களை மட்டுமே தரிசிக்க முடிகிறது. Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்; யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா? சித்தர்களின் பூமி என்ற சிறப்புக்குரியது சதுரகிரி மலை. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்திற்கு இடையே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு சுந்தர மகாலிங்கம் தவிர ஈசன் ஐந்து வகையான லிங்கமாகக் காட்சி தருகிறார். கரடுமுரடான பாதைகளைக் கடந்து வரும் பக்தர்கள் இதில் நான்கு லிங்கங்களை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேறி வரும் பக்தர்கள் வழியிலேயே இரட்டை லிங்கம், சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என நான்கு லிங்கங்களைத் தரிசித்து வரும் நிலையில், பார்க்க முடியாத அந்த ஐந்தாவது லிங்கம் எது? அதுதான் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பெரிய மகாலிங்கம். பெரிய மகாலிங்கம் என்பது பெயருக்கு ஏற்ப அளவில் பெரிய இயற்கையாக அமைந்த பெரிய பாறையே லிங்கம் போல காட்சி தருவதால் பெரிய மகாலிங்கம் என குறிப்பிடப்படுகிறது. இதற்கு கூடுதல் சிறப்பாக இந்த பாறையின் பின்புறம் படர்ந்துள்ள மரத்தின் வேர்கள் சிவனின் பிடரி முடி போல இருப்பதால் பக்தர்கள் இதை சிவனாகவே பார்க்கின்றனர். இதையும் படிங்க: Pongal Celebration: தமிழர் பாரம்பரிய உடையில் கலக்கிய வெளிநாட்டவர்கள்... குலவையிட்டு பொங்கல் வைத்து அசத்தல்... ஏன் அனுமதி இல்லை? கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய மகாலிங்கத்தை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுமதிக்கப்படுவது இல்லை. காரணம் இந்த பெரிய மகாலிங்கம் சதுரகிரி மலையின் உச்சிப் பகுதியான தவசிப்பாறைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தவசிப்பாறைக்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், பெரிய மகாலிங்கத்திற்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. அனுமதி இல்லை எனினும், இன்றளவும் பக்தர்கள் மத்தியில் பெரிய மகாலிங்கம் பேசுபொருளாகவே உள்ளது. Also Read: மேஷம் முதல் மீனம் வரை... இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்.? ஜனவரி 06, 2025 உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க tags : Local News Virudhunagar Location : Virudhunagar,Tamil Nadu First Published : January 05, 2025 3:36 PM IST தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Sathuragiri: சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்... யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா... View More Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.