SPIRITUAL

நவராத்திரி நாட்களில் மட்டும் காட்சி கொடுக்கும் ஸ்ரீ சக்கரம்... ராமநாதசுவாமி கோவிலில் குவியும் பக்தர்கள்...

நவராத்திரி நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு தரிசனம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஸ்ரீ சக்கரத்திற்கு தினமும் காலை 13 வகையான பொருட்களை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். வருடத்தில் 10 நாட்கள் மட்டும் நடைபெறும் இந்நிகழ்வினை காண பக்தர்கள் வருகை புரிவார்கள். ஸ்ரீ சக்கரம் வரலாறு என்ன என்பதை பார்க்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி கொலு பொம்மைகள் வைத்து விமர்சியாக நடைபெறும். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் காலையில் ஸ்ரீ சக்கரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. இரவு சிவதுர்க்கை, சரஸ்வதி, லெட்சுமி, மகிஷாசுரமர்த்தினி என தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பர்வதவர்த்தினி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஸ்ரீ சக்கரமானது ராமநாதசுவாமி கோவிலுக்கு ஜெகத்குரு சிங்கேரி பீடாதிபதி சுவாமிகள் வழங்கியதில் இருந்து பலவருடங்களாக நவராத்திரி உற்சவத்தின் போது பக்தர்கள் முன் வைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி தெய்வங்களை வழிபடுவது போல் நினைத்து ஸ்ரீ சக்கரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. நவராத்திரி நாட்களில் ஸ்ரீ சக்கரத்தினை வணங்கி பிராத்தனை செய்வதால் கஷ்டங்கள் தீர்ந்து வியாதிகள் நிவர்த்தியாகி நோய் நொடிகள் இன்றி மகிழ்வாக வாழலாம் என்ற ஐதீகம் உள்ளது. இதையும் வாசிக்க: TNPSC Exam Group 2 : இலவச பயிற்சி… ஈஸியா பாஸ் ஆகலாம்… இந்த ஆவணங்கள் மட்டும் போதும்… இதில் நவாவரண பூஜையான மஞ்சள், பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம், குங்குமம், தயிர், போன்ற 13 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரித்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படும். வருடத்தில் ஒருமுறை வரக்கூடிய நவராத்திரி நாட்களில் மட்டுமே அம்மன் சன்னதியில் இருந்து வெளிய எடுத்து பூஜை செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் அம்மன் சன்னதி வைத்து பூஜைகள் செய்யப்படும் என குருக்கள் சங்கர வாத்தியார் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.