SPIRITUAL

9 படியில் கொலு வைப்பதன் தத்துவம் இது தான்... ஊட்டியின் புகழ்பெற்ற கோவிலில் நவராத்திரி விழா...

நவராத்திரி கொலு சிவனுக்கு உகந்த நாளாகச் சிவராத்திரி இருப்பது போல, அம்மனுக்கு உகந்த நாளாக நவராத்திரி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நவராத்திரி விழாவிற்காகப் பல்வேறு அம்மன் கோவில்களிலும், பலருடைய வீடுகளிலும் கொலு வைத்து அம்மனை வழிபடுகின்றனர். இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் மாரியம்மன், காளியம்மன் கோவிலில் நவராத்திரி விளக்குப் பூஜை நடைபெற்றது. நவராத்திரியின் போது, துர்க்கையான பார்வதியை முதல் மூன்று நாட்களும், லட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும், பத்தாவது நாள் விஜய சாமுண்டீஸ்வரி ஆக வணங்க வேண்டும். இதையும் படிங்க: ஆந்திராவுக்கு அடுத்து நாம தான்… புத்தகத் திருவிழாவில் வனத்துறை அளித்த சர்ப்ரைஸ்… நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே நாம் எல்லோரும் ஒன்றே என்று உணர்த்துவது தான். துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறை சக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரமர்த்தினியான அவதாரம் எடுத்து மகிஷாசூரன் எனும் அரக்கனை அழிப்பதையே விஜயதசமி ஆக கொண்டாடப்படுகிறது. துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனித நேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரஸ்வதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும். இந்த மூன்று சக்திகளும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்குக் காட்சி தருகிறார்கள், அவர்களை எப்படி வணங்க வேண்டும், எந்த நைவேத்தியம் செய்ய வேண்டும், அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டே அதன்படி 9 நாட்களும் பூஜைகளைச் செய்தால் அளவற்ற பலன்களைப் பெறலாம் என தெரிவிக்கின்றனர். இதையும் படிங்க: கலைஞனை உயரத்தில் வைக்கும் கலை இது… இந்த மரக்கால் ஆட்டத்திற்கு இப்படியொரு வரலாறு இருக்கா… நவராத்திரி கொலு குறித்து சரவணன் கூறுகையில், “நவராத்திரி என்பது புரட்டாசியில் மகாளய அமாவாசையை அடுத்து வரக்கூடிய ஒன்பது நாட்கள் அம்மனை அலங்கரித்து பூஜைகள் செய்து, பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அம்மன் கோவில்களில் இந்த வழிபாடு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலித்து வருகிறார். கொலு பொம்மைகள் வைத்தலில் ஓரறிவு ஜீவன் முதல் மனிதர்கள் தெய்வங்கள் வரையிலும் அனைத்து உயிர்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள், மனிதர்கள், விலங்குகள் என அனைவரும் சமமே என உணர்த்தும் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.