SPIRITUAL

"வீடு ஃபுல்லா குட்டி குட்டி கொலு பொம்மைகள் தான்" - 49 ஆண்டுகளாக கொலு வைத்து கொண்டாட்டம்...

49 ஆண்டுகளாக கொலு வைத்து கொண்டாடி வருகிறார் சிவா நவராத்திரி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது குட்டி, குட்டி அழகான கொலு பொம்மைகள் தான். இதற்காக பொதுமக்கள் கடைகளில் பொம்மைகள் வாங்கி தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவை கொலு பொம்மைகளுடன் மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் வைத்து கொண்டாடுவார்கள். இதற்காக நவராத்திரி தொடங்குவதற்கு முன்பு கடைகளில் பொம்மைகள் விற்பனை ஆரம்பித்து விடும். மக்களும் ஒவ்வொரு வருடமும் புதிய பொம்மைகள் வாங்கி தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தியாகராஜ நகரில் 49 ஆண்டுகளாக கொலு வைத்து கொண்டாடி வருகிறார் சிவா என்பவர். இதற்கு இவரின் குடும்பத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். குறிப்பாக இவர்கள் வீடு முழுவதும் கொலு பொம்மைகளால் நிறைத்து வைத்துள்ளனர். இதன் காரணமாக நகர் பகுதியில் இருந்து பொதுமக்கள் பலர் சிவா வீட்டிற்கு சென்று கொலு பொம்மைகளை பார்த்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் 9 நாட்களும் பூஜைகள் மற்றும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக வீட்டிற்கு வரும் பக்தர்களுக்கு சிவா குடும்பத்தினர் குங்குமச்சிமிழ் உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். இதையும் வாசிக்க: Navarathri Festival 2024: வீட்டில் கொலு பொம்மைகள் வைச்சுருக்கீங்களா..? இந்த வகை பொம்மை கட்டாயம் வைங்க… இது குறித்து சிவாவின் மகள் ஸ்வேதா கூறுகையில், “துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன் அலங்காரங்கள் அருமையாக உள்ளது. இந்த ஆண்டு அயோத்தி ராமர் கோவில், அதன் உள்ளே இருக்கும் ராமர் தத்துவமாக வைத்துள்ளோம். அது மட்டுமல்லாமல் பஞ்ச பூத தலமாக சிவன் ஆலயங்களையும் வைத்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் கொலு வைத்து வருகிறோம். குறிப்பாக அம்மன் சிலைகள் இங்கு அருமையாக வைத்துள்ளோம். வீடு முழுவதும் கொலு பொம்மைகளால் நிறைக்கப்பட்டு உள்ளன. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் இதனை பார்த்து நவராத்திரியை கொண்டாட கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.