SPIRITUAL

இந்தாண்டு மகாளய அமாவாசை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது தெரியுமா..?

புரட்டாசி அமாவாசை Mahalaya Amavasai 2024 : பொதுவாகவே அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆடி, தை, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையானது மிகவும் விசேஷமானதாகும். ஆடி மற்றும் தை அமாவாசையைக் காட்டிலும் புரட்டாசி அமாவாசையில் முன்னோர்களை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். ஏனெனில் பித்ரு லோகத்திலிருந்து முன்னோர்கள் பூமிக்குப் புறப்படும் நாள் ஆடி அமாவாசை என்றும், முன்னோர்கள் பூமிக்கு வந்து சேரும் நாளே புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை என்றும், முன்னோர்கள் மீண்டும் பித்ரு லோகத்திற்குத் திரும்பிச் செல்லும் நாளே தை அமாவாசை என்றும் கருதப்படுகிறது. ஆகையால் புரட்டாசி மகாளய அமாவாசையில் முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள் என்றும், அந்த சமயத்தில் அவர்களை வணங்கி தர்ப்பணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும் என ஐதீகமாகப் பின்பற்றப்படுகின்றது. இதையும் படிங்க: ஸ்ஸப்பா…. என்னா வெயிலு… குதுகல குளியல் போட்ட திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை… புரட்டாசி மகாளய அமாவாசை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்றும், அன்றைய தினத்தில் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும் என்பதைக் குறித்து ஸ்ரீநிவாச சித்தர் கூறுகையில், “வருடத்திற்கு மூன்று முறை மகாளய அமாவாசை வரும் தை, ஆடி மற்றும் புரட்டாசி இந்த மூன்று அமாவாசையிலும் மிகுந்த சிறப்புப் பெற்றது புரட்டாசி மாத அமாவாசை தான் முன்னோர் வழிபாட்டுக்கு மிகுந்த சிறப்பு வாய்ந்த அமாவாசையாகும். ஏனென்றால் இந்த அமாவாசை பௌர்ணமி தொடங்குவதிலிருந்து அந்த 15 நாட்களும் முன்னோர்கள் பூமியில் தான் நம்மாளுடன் தங்கி இருப்பார்கள். அதனால் இந்த அமாவாசையில் வழிபடும்போது முன்னோர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்ன கூறப்படுகின்றது. பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரும் அந்த 15 நாட்களுமே முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவது முன் ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும் அவ்வாறு 15 நாட்களும் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் நாளை ஒருநாள் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்வது மிகுந்த நன்மையைத் தரும். இதையும் படிங்க: 5 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற சிலம்ப போட்டி… அசத்திய கன்னியாகுமரி வீராங்கனைகள்… காலை 9:30 மணிக்கு முன்பாகத் தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த நல்லதாகும், மேலும் படையலானது 11:30யில் இருந்து 12 மணிக்குள் படையல் போட்டு விட வேண்டும். ஆண்டுதோறும் நீங்கள் செய்யத் தவறிய தர்ப்பணம் இந்த அமாவாசையில் செய்தால் மிகவும் நன்மையைத் தரும். மேலும் இந்த அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி ஆரம்பிப்பதால் மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும். ஒன்பது நாட்கள் நவராத்திரி முடிந்து பத்தாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறுவதால் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. மேலும் பல புராணங்களில் புரட்டாசி அமாவாசை பற்றி பிரசித்தியாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதனால் இந்த அமாவாசையின் போது பெரியவர்கள், வயதானவர்களுக்கு தானம் செய்வதும் நன்மையைத் தரும். மேலும், பசுவிற்கு அகத்திக்கீரை தருவது மிக நன்மையைத் தரும். கண்டிப்பாகப் புரட்டாசி அமாவாசையின் போது பசுவிற்கு அகத்திக்கீரை தருவது நல்லது. மேலும் அனைத்துக் காய்கறிகளையும் தானம் செய்வதும் நன்மையை விளைவிக்கும். மேலும், நம் முன்னோர்களுக்கு பிடித்தமான அனைத்துப் பொருட்களையும் வைத்து படையல் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.