SPIRITUAL

Mahalaya Amavasai | 21 ஆண்டுகள் வரையிலான பித்ரு தோஷத்தை போக்கும் மகாளய பட்ச அமாவாசை... எங்கு செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்!

ஆனி மாதம் அமாவாசை மகாளயபட்சத் தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாகக் கிடைக்கும். ஒருவர் இறந்த பின்பு அவருக்குரிய பித்ரு கடன்களை முறைப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் குழந்தை பிறப்பது தாமதமாகும் அல்லது தடைப்படும் என சாஸ்திரம் கூறுகிறது. நாளை வரவிருக்கும் மகாளய பட்ச அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதன் மூலம் 21 ஆண்டுகளுக்கு முந்தைய பித்ரு தோஷம் விலகும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தோஷம் என்றால் என்ன? பெற்றோரை பிள்ளைகள் இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களை செய்வது, பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் என ஆசையினாலும் பேராசையினாலும் பிறருக்கு தீங்கிழைப்பது, குழந்தை பிறந்தவுடன் இறந்து போவது , குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவுவது புத்திரன் பகைவனைப் போல செயல்படுவது மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்படுவது போன்ற இந்த மன கஷ்டங்கள் தொடர்ந்தால் அது உங்கள் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருப்பதை உறுதிப்படுத்துவதாக கருட புராணம் கூறுகிறது. மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்தன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டுமல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்று அளிக்கப்படும் தர்ப்பணமானது ‘காருண்ய தர்ப்பணம்’ எனவும் அழைக்கப்படுகிறது.நம் முன்னோர்கள் இறந்த நாள் தெரியாதவர்கள் கூட இந்த நாளில் தர்ப்பணம் செய்யலாம். எள்ளும், தண்ணீரும் பித்ருக்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. இதையும் படிக்க: சூரிய கிரகணம் முடிந்த பின்பு இந்த 5 விஷயங்களை செய்ய மறக்காதீங்க.. ஏன் தெரியுமா? திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருமயம் அருகே உள்ள அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. பித்ரு தோஷம் நீங்க புனித நீர்நிலைகளில் பிதுர்பூஜை செய்வது சிறந்ததாக கூறப்படுகிறது. புனித நதிகள், கடற்கரையோரங்கள், கோவில்களில் உள்ள தீர்த்தக் கட்டிடங்கள் ஆகியவை தர்ப்பண பூஜைக்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன. புனிதத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் மகாளய பட்ச அமாவாசையன்று வேத விற்பன்னர்கள் மூலம் தர்ப்பணம் செய்வதன் மூலம் அன்று அளிக்கப்படும் எள்ளும், தண்ணீரும், பிண்டமும் மூதாதையர்களை சென்று அடைகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.