SPIRITUAL

துளசி பூஜை செய்வதற்கான சில டிப்ஸ்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!

துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி திருமாலின் மார்பை அலங்கரிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது. துளசியில் சகல தேவதைகளும் வாழ்வதாக சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள். இந்து மதத்தில் துளசி புனிதமாகவும் போற்றத்தக்கதாகவும் கருதப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சமான துளசி வழிபாடு பொருளாதார வளத்திற்கு வழி வகுக்கும். துளசியை வழிபடுவதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவி மகிழ்ச்சியும் செல்வமும் உண்டாகும். துளசி பூஜை தொடர்பான சாஸ்திரங்களில் சில சிறப்பு விதிகள் உள்ளன. துளசி செடியை வீட்டில் சரியான திசையில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். துளசி பூஜை பற்றிய சில முக்கிய விஷயங்களை இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம். 1. மத சாஸ்திரங்களின்படி, துளசியின் வழிபாடு, லட்சுமி தேவியுடன் விஷ்ணுவின் ஆசீர்வாதத்தையும் சேர்த்து நமக்கு தருகிறது. 2. துளசியை தினமும் குளித்த பின்னரே வணங்க வேண்டும். துளசிக்கு அதிக அளவில் தண்ணீர் ஊற்றக்கூடாது. 3. சாஸ்திரங்களின்படி, சூரிய உதயத்திற்குப் பிறகு துளசிக்கு நீர் வழங்குவது மங்களகரமானது. லட்சுமி தேவியின் ஓய்வு நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை துளசியைத் தொடக்கூடாது. ஏகாதசியன்று கூட துளசிக்கு நீர் ஊற்றக்கூடாது. 4. துளசி பூஜையின் போது நீராடி துளசி மந்திரத்தை உச்சரிப்பது அதிக பலனைத் தரும். லட்சுமி தேவியின் அருளால் மகிழ்ச்சி, வளம், அமைதி, பொருளாதார நிலை வலுப்பெறும். மகாவிஷ்ணுவின் அருளால் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 5. வீட்டில் துளசியை எந்த திசையில் நட வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் துளசியை வடகிழக்கு திசையில் நடுவது நல்லது. துளசியை வைக்கும் போது முகத்தை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். துளசியை தெற்கு திசையில் நடக்கூடாது. 6. நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். 7. துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. 8.செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். இதையும் படிக்க: துளசி செடி திடீரென முளைத்தால் இவ்வளவு நன்மைகளா… ஜோதிடர் கூறுவது என்ன? 9.கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும். 10. ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.