SPIRITUAL

எக்கச்சக்க கொலு பொம்மைகள்... நெல்லையப்பர் கோவிலை அலங்கரித்த கொலு பொம்மைகள்...

கொலு பொம்மைகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் தசரா பண்டிகை தொடங்கியதையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவில் சோமவார மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு அக்-03 அன்று சிறப்புக் கும்பம் வைத்து ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத் தீபாராதனை நடந்தது. இதையடுத்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அக்-03 காலை லட்சார்ச்சனை தொடங்கியது. ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா வரும் 11ஆம் தேதிவரை வழக்கமான உற்சாகத்துடன் நடக்கிறது. இதற்காகச் சோமவார மண்டபத்தில் நடுநாயகமாக சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் 9 படிகள் அமைத்து மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன், காயத்திரி தேவி, சரஸ்வதி, லட்சுமி, மீனாட்சி உள்பட 9 வகையான அம்மன் சிலைகள், விஷ்ணுவின் தசாவதார சுவாமி சிலைகள், அஷ்ட லட்சுமி, நாயன்மார்கள், பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், வெங்கடாசலபதி, ஐயப்பன், திருமணக் கோஷ்டி பொம்மைகள், நாதஸ்வரம் கலைஞர் பொம்மைகள், பூர்ணக் கும்பம், யானை, சிங்கம், புலி, கரடி, மயில், மூஷிகர்கிளி உள்ளிட்ட வகையான பொம்மைகள், சுவாமி சிலைகளை அழகாக அடுக்கி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதையும் வாசிக்க: TNPSC Exam Group 2 : இலவச பயிற்சி… ஈஸியா பாஸ் ஆகலாம்… இந்த ஆவணங்கள் மட்டும் போதும்… இந்தாண்டு கொலுவில் ஆயிரக்கணக்கான பொம்மைகள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்குக் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / எக்கச்சக்க கொலு பொம்மைகள்... நெல்லையப்பர் கோவிலை அலங்கரித்த கொலு பொம்மைகள்... எக்கச்சக்க கொலு பொம்மைகள்... நெல்லையப்பர் கோவிலை அலங்கரித்த கொலு பொம்மைகள்... கொலு பொம்மைகள் நிறைந்த நெல்லையப்பர் கோவில் Navratri festival | நெல்லையப்பர் கோவிலில் சோமவார மண்டபத்தில் கொலு வைத்து சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு வழிபாட்டுடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tirunelveli,Tamil Nadu Last Updated : October 6, 2024, 1:37 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : pradeepa m Reported By : S Santhanakumar தொடர்புடைய செய்திகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தசரா பண்டிகை தொடங்கியதையொட்டி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவில் சோமவார மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு அக்-03 அன்று சிறப்புக் கும்பம் வைத்து ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத் தீபாராதனை நடந்தது. இதையடுத்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அக்-03 காலை லட்சார்ச்சனை தொடங்கியது. ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா வரும் 11ஆம் தேதிவரை வழக்கமான உற்சாகத்துடன் நடக்கிறது. இதற்காகச் சோமவார மண்டபத்தில் நடுநாயகமாக சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிலைகள் கொலுவில் வைக்கப்பட்டுள்ளது. விளம்பரம் மண்டபத்தில் 9 படிகள் அமைத்து மாரியம்மன், காளியம்மன், துர்க்கை அம்மன், காயத்திரி தேவி, சரஸ்வதி, லட்சுமி, மீனாட்சி உள்பட 9 வகையான அம்மன் சிலைகள், விஷ்ணுவின் தசாவதார சுவாமி சிலைகள், அஷ்ட லட்சுமி, நாயன்மார்கள், பெருமாள், விநாயகர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், வெங்கடாசலபதி, ஐயப்பன், திருமணக் கோஷ்டி பொம்மைகள், நாதஸ்வரம் கலைஞர் பொம்மைகள், பூர்ணக் கும்பம், யானை, சிங்கம், புலி, கரடி, மயில், மூஷிகர்கிளி உள்ளிட்ட வகையான பொம்மைகள், சுவாமி சிலைகளை அழகாக அடுக்கி கொலு வைக்கப்பட்டுள்ளது. விளம்பரம் இதையும் வாசிக்க: TNPSC Exam Group 2 : இலவச பயிற்சி… ஈஸியா பாஸ் ஆகலாம்… இந்த ஆவணங்கள் மட்டும் போதும்… இந்தாண்டு கொலுவில் ஆயிரக்கணக்கான பொம்மைகள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் சோமவார மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்குக் காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Local News , Navarathri First Published : October 6, 2024, 1:37 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.