SPIRITUAL

Solar Eclipse 2024 : சூரிய கிரகணம் முடிந்த பின்பு இந்த 5 விஷயங்களை செய்ய மறக்காதீங்க.. ஏன் தெரியுமா?

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் சுமார் 6 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடிக்கும். இந்த சூரிய கிரகணத்தின்போது மகாளய அமாவாசையும் வருகிறது. இது அஸ்வினி அமாவாசை தேதியில் வருகிறது. மத நம்பிக்கைகளின்படி, சூரிய கிரகணம் எப்போதும் அமாவாசை நாளில் நிகழ்கிறது. அதேபோல், சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு நாளில் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்திற்கு 12 மணிநேரத்திற்கு முன்பு சூதக் காலம்(Sutak Kaal) தொடங்குகிறது. இந்த நேரத்தில் எந்த சுப காரியம் மேற்கொள்ளக்கூடாது. சூதக் காலத்தில் உணவு தயாரித்தல், உண்ணுதல், வழிபாடு போன்றவற்றைச் செய்யக்கூடாது. அதேபோல், கோயில்களின் கதவுகளும் மூடப்படும். இந்நிலையில், சூரிய கிரகணம் நிகழும் நேரம் என்ன?, சூதக் காலம் எப்போது தொடங்குகிறது? சூரிய கிரகணம் முடிந்ததும் என்ன செய்ய வேண்டும்? என்று பூரியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ஜோதிடர் டாக்டர் கணேஷ் மிஸ்ரா கூறி உள்ளார். Also Read: வானத்தில் திடீரென தோன்றிய வித்தியாசமான வெளிச்சம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்! சூரிய கிரகணம் 2024 நிகழும் நேரம்? இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (அக். 2) இரவு 9:13 மணிக்கு நிகழும். இந்த சூரிய கிரகணம் அக்டோபர் 3ஆம் தேதி, வியாழக்கிழமை அதிகாலை 3:17 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணம் மொத்தம் 6 மணிநேரம் 4 நிமிடங்கள் நீடிக்கும். எந்த இடங்களில் சூரிய கிரகணம் தெரியும்? சிலி, அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, உருகுவே, பெரு, நியூசிலாந்து, பிஜி, ஈக்வடார், அண்டார்டிகா, டோங்கா, அமெரிக்கா, பராகுவே போன்ற இடங்களில் இந்த சூரிய கிரகணம் தெரியும். இருப்பினும், சிலி மற்றும் அர்ஜென்டினாவில் முழு சூரிய கிரகணத்தை காணலாம். சூரிய கிரகணம் 2024 சூதக் காலம்: இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. அப்படி இந்தியாவில் தெரிந்திருந்தால், அதன் சூதக் காலம் 12 மணிநேரத்திற்கு முன்பே தொடங்கியிருக்கும். சூதக் காலம் என்பது, கிரகணத்திற்கு முன் அனுசரிக்கப்படும் அசுப காலமாகும். சூரிய கிரகணத்திற்கு பின் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்: 1. சூரிய கிரகணம் முடிந்தவுடன், கங்கை நீரால் பூஜை அறையுடன் வீடு முழுவதையும் சுத்தம் செய்யவும். 2. அதன்பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். அத்துடன் பழைய துணிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். 3. சூரிய கிரகணம் முடிந்ததும், பூஜை அறையில் உள்ள தெய்வங்களை குளிப்பாட்டி புது ஆடை மாற்ற வேண்டும். அவர்களை வணங்கி, அன்னதானம் செய்து, ஆரத்தி எடுக்கலாம். அப்போது ஒலிக்கும் மணி சத்தம் கிரகணத்தின் எதிர்மறை விளைவை நீக்குகிறது. 4. வழிபட்ட பிறகு, கோதுமை, சிவப்பு ஆடைகள், சிவப்பு பழங்கள், சிவப்பு மலர்கள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் சூரிய பகவானுடன் தொடர்புடையவை. சந்திர கிரகணத்தின் போது அரிசி மற்றும் வெள்ளை பொருட்களை தானம் செய்யுங்கள். 5. கிரகணம் முடிந்த பிறகுதான் உணவு சமைக்க வேண்டும் அல்லது சாப்பிட வேண்டும். அதில் துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்ளவும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செய்த ஜோதிட நடவடிக்கைகள் வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.