SPIRITUAL

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு இப்படி செய்யுங்க... எல்லா செல்வமும் பெருகுமாம்

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அன்றைய தினம் பக்தர்கள் பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் புரட்டாசி மாதத்தின் கடந்த 3 வார சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோயில்களில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதையும் படிக்க: சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 5 ராசிகள்… இந்த ராசிக்கு திருமண யோகமும் இருக்காம்! நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. ஒவ்வொரு தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது. மேலும் இந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் கும்பிடலாம். இதையும் படிக்க: மற்றவர்களின் வாழ்வில் அற்புதங்களை ஏற்படுத்தும் 3 ராசியினர்… உங்க ராசி இருக்கா? பெருமாளை வழிபடும் முறை: வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெற இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை வணங்க வேண்டும். இதனை இந்த வாரத்தில் வரும் கடைசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை மனமுருகி வணங்கினால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது மக்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.