SPIRITUAL

Navratri 2024 | நவராத்திரியின் முதல் நாளில் செய்ய வேண்டியவைகளும்... செய்யக்கூடாதவைகளும்!

பெண் தெய்வங்களை கொண்டாடும் வகையில், இந்து மத விழாவான நவராத்திரி அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் தேவையான தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. வீட்டில் கொலு வைத்து நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் அம்மனுக்கு படைப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூ வைத்து அம்மனை அலங்கரிப்பார்கள். 9 நாளும் 9 வகையான வாத்தியங்கள் வாசிப்பார்கள். வடமாநிலங்களில் நவராத்திரி மிகவும் விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரியின் முதல் நாள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். நவராத்திரியின் முதல் நாள் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். இன்று மிருதங்கம் வாசிக்கத் தெரிந்தவர்கள் தோடி ராகம் இசைப்பது மிகவும் சிறந்தது. சாமுண்டி அம்பாளுக்கு ஏற்ற மல்லிகை, வில்வம் மலர் சூட்டி வழிபட வேண்டும். முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிக்க வேண்டும். -நவராத்திரி முதல் நாள் அம்பிகைக்கு வெண்பெங்கல் நைவேத்தியம் செய்து கொலுவை பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நாளில் அம்பிகையை வணங்கினால் எதிரிகள், கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும் செல்வமும் விருத்தி அடையும். பூஜை நேரம், காலை 10.30-12.00 மணி வரை மாலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் வணங்க வேண்டும். இதையும் படிக்க: திருப்பதி கோயிலில் குவிந்த பக்தர்கள்.. ஒரு நாள் உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? - நல்ல நேரம் பார்த்து, ஷரதியா நவராத்திரியின் முதல் நாளில் கலசத்தை வைக்க வேண்டும். பூஜையின் தொடக்கத்தில் அகண்ட ஜோதியை ஏற்றும் வழக்கம் உள்ளது. ஆனால் சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். - நீங்கள் வீட்டில் அம்பிகை சிலையை நிறுவி வழிபடுவதாக இருந்தால், நெய், கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெயில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும - நீங்கள் நெய் தீபம் ஏற்றினால் அதை அம்பிகை சிலையின் வலது பக்கத்தில் வைக்க வேண்டும். கடுகு அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால், அம்பிகையின் இடதுபுறம் தீபம் ஏற்றவும். உளுத்தம்பருப்பு, அரிசி அல்லது கருப்பு எள் மீது விளக்கை வைக்கவும். ஒளியின் சுடர் வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். தவறுதலாக கூட தெற்கு திசையில் விளக்கு வைக்க கூடாது. - ஒன்பது நாட்கள் முழுவதும் விளக்கு எரிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்தகைய சூழ்நிலையில், போதுமான அளவு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இதையும் படிக்க: சூரிய கிரகணம் முடிந்த பின்பு இந்த 5 விஷயங்களை செய்ய மறக்காதீங்க.. ஏன் தெரியுமா? - 9 நாட்களுக்குள் விளக்கு அணைந்தால், நீங்கள் துர்கா மாவிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் விளக்கை ஏற்றலாம். - ஒன்பது நாட்களுக்குப் பிறகும் விளக்கு தொடர்ந்து எரிந்தால், அதை ஊதி அணைக்க வேண்டாம். அவ்வாறு செய்வது அசுபமாக கருதப்படுகிறது. விளக்கு அதுவாகவே அணைய வேண்டும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.