SPIRITUAL

தசராவிற்கு நினைத்த வேடமெல்லாம் போட முடியாது... பக்தர்கள் ஏற்கும் வேடத்தின் காரணம் இது தான்...

தசராவிற்கு வேடமேற்கும் பக்தர்கள் நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பகுதிகளிலும் அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் ஒரு சில பண்டிகையானது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் தான் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விஜயதசமி அல்லது தசரா என்று அழைக்கப்படும் பண்டிகையானது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தசரா என்றால் பத்தாவது நாள் வெற்றி என்று கூறப்படுகின்றது. அதாவது துர்க்கை அம்மன் மகிசாசூரனை அழிப்பதற்காக 9 நாள் விரதம் இருந்து 10வது நாள் காளியாக அவதரித்து மகிசாசூரனை வென்ற நாளாகக் கொண்டாடப்படுகின்றது. அதனால் தான் தசரா என்று பலராலும் அழைக்கப்படுகின்றது. நவராத்திரி துவங்கியது குலசேகரன்பட்டினத்தில் வீற்றிருக்கும் முத்தாரம்மன் கோவிலில் காப்பு கட்டிய பக்தர்கள் பலவிதங்களில் வேடம் அணிவதை அறிந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பாகப் பக்தர்கள் அம்மனிடம் தங்கள் வேண்டுதலை வைத்து மாலை அணிந்து 60 நாட்கள் மற்றும் 40 நாட்கள் விரதம் இருந்து வேடம் கட்டுகின்றனர். அவர்கள் கட்டும் ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு காரணமும், பின்னணியும் இருக்கின்றது. குரவன், குறத்தி வேடத்திலிருந்து காளி வேடம் வரை பக்தர்கள் பல வேடம் அணிந்து செல்வார்கள். இதையும் படிங்க: 9 படியில் கொலு வைப்பதன் தத்துவம் இது தான்… ஊட்டியின் புகழ்பெற்ற கோவிலில் நவராத்திரி விழா… அதிலும் ஒரு சிறப்பம்சம் என்றால் வேடம் அணிந்து செல்பவர்கள் அனைவருமே ஆண்கள் தான். அதாவது சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இங்கு மாலை அணிந்து வேடம் கட்டி வருவார்கள். ஆனால் பெண்கள் மாலை மட்டுமே அணிவார்கள் ஆண்கள் மட்டும் தான் பெண் தெய்வமான காளியின் தத்ரூபமான உருவத்தை வேடமாக அணிந்து ஆடிச் செல்வார்கள். மேலும் இங்கே மட்டும் தான் ஆண்கள் கும்மிப்பாட்டு பாடியும் மற்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதாவது கருப்பசாமி, சுடலைமாடன், காளி அவதாரம், அம்மன் என அவர்களுக்கு என் தனித்தனிப் பாடல்களைப் பாடி அந்த வேடமணியும் நபர்கள் மீது அந்த சாமியை வரவழைப்பார்கள். மாலை அணியும் பக்தர்கள் அவர்களது பகுதிகளில் சிறு குழுக்களாக இணைந்து சிறிய குடில் அமைத்து, ஒவ்வொரு நாளும் தங்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருவார்கள். இது குறித்து ஒரு தசரா குழுவில் குருசாமியான சசி கூறுகையில், “முத்தாரம்மன் கோவிலுக்கு முதன்முதலாக ஒருவர் மாலை அணிகிறார் என்றால் அவர்கள் போட வேண்டிய முதல் வேடம் குறவன் குறத்தி ஆகும். இதையும் படிங்க: ஆந்திராவுக்கு அடுத்து நாம தான்… புத்தகத் திருவிழாவில் வனத்துறை அளித்த சர்ப்ரைஸ்… ஏனென்றால் முதல்முறையாகக் குறவன் குறத்தி அவதாரத்தில் தான் முத்தாரம்மன் அங்குக் காட்சியளித்தார். அதனால் மாலை அணியும் ஒவ்வொரு நபர்களும் முதல் வேடமாகக் குறவன் குறத்தி ஆகத்தான் வேடம் அணிகின்றனர். அதன்பிறகு 5 அல்லது 3 வருடம் கழித்து முத்தாரம்மனிடம் அருள்வாக்கு கேட்டு என்ன வேடம் கிடைக்கின்றதோ அதன்பிறகு வேடத்தை மாற்றுவார்கள், அல்லது குலதெய்வம் அவர்கள் உடம்பில் இறங்கினாள் அந்த வேடத்தை மாற்றுவார்கள். மேலும் காளி வேடம் அணிவதற்குத் தொடர்ந்து பத்து வருடமாகும். அதேபோல் ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கின்றது. வேலைவாய்ப்பும் வெற்றியும் கிடைப்பதற்கு என ஒரு வேடம் இருக்கின்றது. காளி வேடம் என்பது சாதாரண வேடமில்லை, எப்பொழுது காளி வேடம் அணிய உத்தரவு கிடைக்கின்றதோ அப்பொழுது தான் காளி வேடம் அணிவார்கள். மேலும் இப்போதுள்ள இளைஞர்கள் மாலை அணிந்தவுடனே கைகளில் வலையில், கம்மல் அனைத்தும் அணிந்து கொள்கின்றனர், ஆனால் அவ்வாறு அணியக்கூடாது. கைகளில் காப்பு கட்டியவுடன் தான்‌ அணிய வேண்டும். நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் 2ன் தசரா குழு. இதையும் படிங்க: கலைஞனை உயரத்தில் வைக்கும் கலை இது… இந்த மரக்கால் ஆட்டத்திற்கு இப்படியொரு வரலாறு இருக்கா… எங்கள் செட்டில் ஒவ்வொரு சாமியும் ஒவ்வொரு வேடம் அணிகின்றனர். ஒருவர் 9 வருடமாகக் கருப்பசாமி வேடம் அணிகின்றார். இதற்கு முன்னர் ஒருவர் 3 வருடம்‌ குறவன் வேடம்‌ அணிந்தார். கருப்பசாமி இவருடைய குலதெய்வம் ஆகையால் ஒருவர் கருப்பசாமி வேடம் அணிகின்றார். மேலும் பிச்சைக்காரர் வேடம், காளி வேடம், அம்மன் வேடம் போன்ற பல வேடங்கள் அணிகின்றனர்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.