SPIRITUAL

Tirumala Tirupati : பளபளப்பாக மாறிய திருமலை திருப்பதி.. ஆழ்வார் திருமஞ்சனம் ஸ்பெஷல்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுகின்றனர். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது. யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதையும் படிக்க: குறைந்த செலவில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? அப்ப உடனே இத பண்ணுங்க! இந்த நிலையில் இம்மாதம் 4 ம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு தெளித்தனர். இதையும் படிக்க: இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முன்னோர்களின் வடிவமாம்..! - எப்போது தெரியுமா? தொடர்ந்து பகல் 11 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / Tirumala Tirupati : பளபளப்பாக மாறிய திருமலை திருப்பதி.. ஆழ்வார் திருமஞ்சனம் ஸ்பெஷல்! Tirumala Tirupati : பளபளப்பாக மாறிய திருமலை திருப்பதி.. ஆழ்வார் திருமஞ்சனம் ஸ்பெஷல்! Tirumala Tirupati | கோயில் ஜீயர்கள், தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரி, அர்ச்சகர்கள்,ஊழியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 1, 2024, 2:01 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Aishwarya.s Written By : News Desk Tamil தொடர்புடைய செய்திகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர்களுக்கு நடத்தப்படும் அபிஷேகத்தை திருமஞ்சனம் என்று கூறுகின்றனர். அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருடத்தில் நான்கு முறை திருமஞ்சனம் (கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் நிகழ்ச்சி) நடத்தப்படுகிறது. யுகாதி, வருடாந்திர பிரம்மோற்சவம், ஆனி வார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திருமஞ்சனம் நடத்துவார்கள். விளம்பரம் இந்த நிகழ்ச்சியின் போது ஏழுமலையான் கோவிலை ஒரு ஆழ்வாராக கருதி அதனை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து சுவர்களுக்கு நறுமண கலவை பூசும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதையும் படிக்க: குறைந்த செலவில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமா..? அப்ப உடனே இத பண்ணுங்க! இந்த நிலையில் இம்மாதம் 4 ம் தேதி திருப்பதி ஏழுமலையானின் வருடாந்திர பிரமோற்சவம் துவங்கி நடைபெற இருப்பதால் அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமையான இன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. விளம்பரம் அப்போது தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் கோவிலை முழுவதுமாக கழுவி சுத்தம் செய்து பல்வேறு வகையான சுகந்த திரவியங்களை பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட நறுமண கலவையை கோவில் சுவர்களுக்கு தெளித்தனர். இதையும் படிக்க: இந்த நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் தங்கள் முன்னோர்களின் வடிவமாம்..! - எப்போது தெரியுமா? தொடர்ந்து பகல் 11 மணி முதல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர். Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Latest News , Tirumala , Tirumala Tirupati , Tirupathi , Tirupati First Published : October 1, 2024, 2:00 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.