SPIRITUAL

வீதியில் ஆடி வந்த 12 சப்பரம்... பாளையங்கோட்டையில் களைகட்டும் தசரா விழா...

பாளையங்கோட்டை சப்ரங்களால் நிறைந்தது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முதல் நாள் தசரா திருவிழாவின் போது 12 சப்பரங்கள் நகரை சுற்றி வந்தன. குறிப்பாக நான்கு சிவன் ரதவீதிகள் வழியாக 12 சக்கரங்களும் சுற்றி ராமசாமி கோவிலில் ஒன்றாக நின்றன. தொடர்ந்து பெருமாள் கோவில் நான்கு ரத வீதிகள் வழியாக 12 சப்பரங்கள் சுற்றி கோபாலசாமி கோவிலில் ஒன்றாக நின்றன. அப்பொழுது அனைத்து சப்பரங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. குறிப்பாக நகர் முழுவதும் சப்பரங்களால் நிறைந்தன. பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். இதில் ஒவ்வொரு சப்பரங்களுக்கும் தனி இசைக் குழுவினர் கலந்துகொண்டு மேளம் அடித்தனர். சப்பரங்களிலிருந்து விழும் பூக்கள், மேல சத்தம், பட்டாசு சத்தம் போன்ற விஷயங்களால் பாளையங்கோட்டை நகரே களைகட்டியது. குறிப்பாக ஆயிரத்தம்மன் கோவில் சப்பரம் அலங்காரக் கொடி ஏந்தி 11 சப்பரங்களை ஒருங்கிணைத்துச் சென்றது. இந்த சிவப்பு கொடி தசரா திருவிழாவின் முதல் நாளின் போது கோவில் முன்பு கட்டப்படுகிறது. ஏற்கனவே வெள்ளைக் கொடியானது கோவில் கொடிமரத்தில் கட்டப்பட்டு விட்டது. இதையும் படிங்க: மார்க்கெட்டிலேயே மாஸ் காட்டும் தக்காளி… விலையைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் பொதுமக்கள்… அதில் பரம்பரை பரம்பரையாக ஓவியம் வரைந்து வரும் அனந்த நாராயணன் கூறுகையில், “கோவிலுக்கு பிரதானமாக இருப்பது கொடிமரம். அந்த கொடி மரத்திற்கு விதிப்படி ஆயுதங்கள் கதாபாத்திரங்கள் கொண்டு வெள்ளைத் துணியில் ஓவியம் வரையப்படுகிறது. இந்த துணி தான் கொடி மரத்தில் ஏறுகிறது. கோவிலில் திருவிழா தொடங்கி விட்டது என்பதற்கு இந்த கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. இந்த கொடியில் ஆயிரத்தம்பாளுடன் ஆயுதங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும். குறிப்பாக அம்மனுக்குரிய வாகனமும் அதில் ஓவியமாக வரையப்பட்டிருக்கும். பத்து நாட்கள் பூஜைகள் குறித்து அந்த துணியில் குறியீடுகள் போடப்பட்டிருக்கும். பரம்பரை பரம்பரையாகக் கொடிமரத்தில் ஏறும் துணியில் ஓவியங்களை வரைந்து வருகிறோம். ஒவ்வொரு கோவில்களுக்கும் ஓவியங்கள் துணியில் வரைவது மாறுபடும். 1வது திருவிழாவின்போது அலங்காரக் கொடி ஏற்றுவது வழக்கம். இதற்காகத் தசரா திருவிழாவின்போது நடப்பது போன்று முதல் திருவிழாவில் 12 சப்பரங்களும் ஊரைச் சுற்றி வரும். குறிப்பாக ஆயிரத்தம்மன் கோவில் சப்பரத்தில் அலங்காரக் கொடி இருக்கும். ஊரைச் சுற்றி வந்த பிறகு அந்த கொடியானது கொடி மரத்திற்கு அருகே கட்டப்படும். இதையும் படிங்க: நூற்றாண்டு பெருமையை தாங்கி நிற்கும் கல்… சுற்றுலாத் தலத்தில் இப்படியொரு வரலாற்று சான்றா… தசரா முடித்தவுடன் அலங்காரக் கொடி கழற்றப்படும். தீர்த்தவாரி முடிந்த பிறகு தான் கொடிமரத்திலிருந்து ஓவியங்கள் உள்ள கொடி அவிழ்க்கப்படும். பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் தான் தசரா விழாவிற்கு சிறப்பாகும்" எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.