SPIRITUAL

பெருமாளுக்கு விஷேசமான புரட்டாசி சனிக்கிழமை.. திவ்ய தேசமான திருவட்டாறில் திரண்ட பக்தர்கள்..

புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும் என கூறப்படும். அதிலும் புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகையால் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவகையில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 87வது திவ்யதேசம் ஆகும். இந்நிலையில் இன்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலில் காலை சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, மதியம் ஸ்ரீபலி பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதிகேசவ பக்தர் சங்க அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க தமிழ் செய்திகள் / ஆன்மிகம் / பெருமாளுக்கு விஷேசமான புரட்டாசி சனிக்கிழமை.. திவ்ய தேசமான திருவட்டாறில் திரண்ட பக்தர்கள்.. பெருமாளுக்கு விஷேசமான புரட்டாசி சனிக்கிழமை.. திவ்ய தேசமான திருவட்டாறில் திரண்ட பக்தர்கள்.. புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமையில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். படிக்கவும் … 1-MIN READ Tamil Kanniyakumari,Tamil Nadu Last Updated : October 5, 2024, 9:11 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Muthu Kathan Reported By : M Bagavathmal தொடர்புடைய செய்திகள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும் என கூறப்படும். அதிலும் புரட்டாசி மாதத்தின் 3வது சனிக்கிழமையில் பெருமாள் வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகையால் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்தவகையில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 87வது திவ்யதேசம் ஆகும். இந்நிலையில் இன்று திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விளம்பரம் கோவிலில் காலை சிறப்புப் பூஜைகளைத் தொடர்ந்து, மதியம் ஸ்ரீபலி பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதிகேசவ பக்தர் சங்க அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: kanniyakumari , Local News , Purattasi First Published : October 5, 2024, 9:11 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.