BUSINESS

UPI Payments | UPI இலிருந்து UPI வாலட்டுகளுக்கு மாறுவதால் என்னென்ன நன்மைகள்?

சிறிய பரிவர்த்தனைகளுக்கு UPIலிருந்து UPI வாலட்டுகளுக்கு மாறுவது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பரிவர்த்தனை தோல்விகளை தடுப்பதற்கும், கேஷ் பேக்குகள் மற்றும் வெகுமதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். சிறிய கட்டணங்களை செலுத்த UPI-க்கு பதிலாக UPI வாலட்டைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருக்கும். UPI உங்கள் வங்கிக் கணக்குடன் நேரடியாக இணைக்கப்படுகிறது. ​​எனவே, UPI வாலட்ஸில் ஏற்கனவே ஏற்றப்பட்ட பண இருப்பைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கை நேரடியாக தொடர்பு கொள்ளத் தேவையில்லை. எனவே குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செய்ய இது உதவுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிறிய பரிவர்த்தனைகளுக்கு UPI (Unified Payments Interface) மற்றும் UPI வாலட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. UPI ஆனது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு நேரடி பரிவர்த்தனைகளை அனுமதிக்கும். அதே வேளையில், UPI வாலட்ஸானது சிறிய மற்றும் அன்றாட பணம் செலுத்துதலுக்கு பாதுகாப்பான விருப்பத்தை வழங்குகிறது. சிறிய கட்டணங்களுக்கு UPI வாலட்களை பயன்படுத்துவது ஏன் சிறந்த மற்றும் பாதுகாப்பான தேர்வாக இருக்கும் என்பதை இங்கே தெளிவாக பார்க்கலாம். 1. UPI மற்றும் UPI வாலட்களைப் புரிந்துகொள்தல் UPI என்பது கூகுள் பே, போன் பே அல்லது பேடிஎம் போன்ற பயன்பாடுகளை ஸ்மார்ட்போன்கள் மூலமாக இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றத்தை அனுமதிக்கும் ஒரு கட்டண முறை. மறுபுறம், UPI வாலட்ஸ் என்பது உங்கள் UPI ஆப்ஸுடன் இணைக்கப்பட்ட ப்ரீபெய்ட் வாலட்டுகள் ஆகும். இவை உங்கள் வங்கிக் கணக்கை நேரடியாக அணுகாமல், வாலட்டில் ஏற்கனவே இருக்கும் பணத்தின் மூலம் சிறிய பரிவர்த்தனைகளை பயன்படுத்த வசதியாக இருக்கும். 2. UPI வாலட்ஸின் பாதுகாப்பு அம்சங்கள் UPI வாலட்டுகள் பொதுவாக குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகின்றன, ஏனெனில் அவை சிறிய கட்டணங்களுக்கு உங்கள் பிரதான வங்கிக் கணக்கை பயன்படுத்தும் அபாயத்தை நீக்குகின்றன. மாறாக அவை வாலட்டை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கை பாதுகாக்கின்றன. குறிப்பாக சிறு வணிகர்களிடம் அல்லது அறிமுகமில்லாத இடங்களில் பணம் செலுத்தும்போது இவை பெரிதும் உதவுகின்றன. 3. பரிவர்த்தனைகள் தோல்வியுறும் ஆபத்து இல்லை UPIஇல் உள்ள முக்கிய சிக்கல்களில் ஒன்று, உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை என்றால் அல்லது பரிவர்த்தனை தோல்வியுற்றால், அது தாமதம் அல்லது ஓவர் டிராஃப்ட்களை ஏற்படுத்தலாம். ஆனால் UPI வாலட்கள் இந்த சிக்கலை நீக்கி, முன் ஏற்றப்பட்ட இருப்பை செலவழிக்க மட்டுமே அனுமதிப்பதால், பரிவர்த்தனை தோல்விகளை தடுத்து சுமூகமான பரிவர்த்தனைகளை உறுதி செய்கிறது. இதையும் படிக்க: ரூ.10 லட்சம் வரை கடனுதவி.. ஆதார் கார்டு இருந்தா போதும்.. அரசின் இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா? 4. பரிவர்த்தனை வரம்புகள் UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் தினசரி வரம்புகளை நிர்ணயிக்கலாம். பெரும்பாலும் வாலெட்டுகளுக்கும் இதேபோன்ற தனி வரம்புகள் இருப்பதால் UPI வாலட்களைப் பயன்படுத்துவது UPI பரிவர்த்தனைகளை பயன்படுத்த உங்களுக்கு வசதியாக இருக்கும். மளிகை சாமான்கள், மாதாந்திர பில்கள் அல்லது ஆன்லைன் சந்தாக்கள் போன்ற அடிக்கடி செலுத்தப்படும் சிறிய பணப் பரிவர்த்தனைகளுக்கு வாலட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 5. கேஷ்பேக் மற்றும் ரிவார்ட்ஸ் வழக்கமான UPI பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது UPI வாலட்ஸ் அடிக்கடி கேஷ்பேக் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் வெகுமதிகளை வழங்குகின்றன. பல்வேறு வணிகர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், இது தினசரி வாலட் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பானதாக இருக்கிறது. 6. எளிமை மற்றும் வசதி UPI வாலட்டில் ஒருமுறை பணத்தை ஏற்றிவிட்டால், சிறிய மற்றும் அடிக்கடி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் UPI பின்களை உள்ளிடுவதற்கு பதிலாக, விரைவாகவும், திறமையாகவும் பணம் செலுத்த வாலட்கள் அதற்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துகின்றன. குறிப்பாக தினமும், பல சிறிய பரிவர்த்தனைகளை கையாளும் வணிகர்களுக்கு இது இன்னும் வசதியாக இருக்கிறது. இதையும் படிக்க: பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிப்பது எப்படி? சிறிய பரிவர்த்தனைகளுக்கு UPIலிருந்து UPI வாலட்டுகளுக்கு மாறுவது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பரிவர்த்தனை தோல்விகளைத் தடுப்பதற்கும், கேஷ்பேக்குகள் மற்றும் வெகுமதிகளை பயன்படுத்திக் கொள்வதற்கும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். பெரிய பரிவர்த்தனைகளுக்கு UPI சிறந்தது என்றாலும், தினசரி மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு UPI வாலட்களை பயன்படுத்துவது உங்கள் பிரதான வங்கிக் கணக்கு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கவும் உதவுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.