BUSINESS

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவது எப்படி?

கிரெடிட் கார்டு பில்களை வாடிக்கையாளர்கள் கஸ்டமர் கேர், ஏடிஎம்கள், வங்கிக் கிளைகள் அல்லது செக் மூலம் ஆஃப்லைனில் செலுத்தலாம். ஆன்லைன் முறைகளில் நெட் பேங்கிங், IMPS, NEFT மற்றும் ஆட்டோ டெபிட் வசதிகள் மூலம் செலுத்தலாம். இந்த சேவைகளானது வட்டியை தவிர்க்கவும், சிறந்த கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்கவும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்கிறது. வழக்கமாக, மற்றக் கட்டணங்கள் எல்லாவற்றையும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருளுக்கான தொகையை அதற்குரிய தேதியில் செலுத்துவதற்குத்தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் கிரெடிட் கார்டை புதிதாக வாங்குபவர்களுக்கு பில்களை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் போகலாம். ஆனால் கவலைப்படாதீர்கள்! நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான வசதியை விரும்பினாலும் அல்லது ஆஃப்லைன் பணம் செலுத்துவதற்கான வசதியை விரும்பினாலும், நாங்கள் உங்களுக்கு படிப்படியான வழிமுறைகளை கொடுத்துள்ளோம். அதைப் பற்றி விரிவாக பார்ப்போம். கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான ஆன்லைன் விருப்பங்கள்: நெட் பேங்கிங்: உங்கள் நெட் பேங்கிங் அக்கவுன்ட்டை லாகின் செய்யவும். ‘கிரெடிட் கார்டு’ பட்டனை தேர்ந்தெடுக்கவும். ‘ரெஜிஸ்டர் நியூ கார்டு’ என்பதை தேர்ந்தெடுக்கவும். கிரெடிட் கார்டு தகவல்களை கொடுத்து ‘சப்மிட்’ என்பதை தேர்ந்தெடுக்கவும். உங்கள் கார்டை ரெஜிஸ்டர் செய்திருந்தால் ‘ட்ரான்ஸ் ஆக்ட்’ பட்டனை செலக்ட் செய்து, ரெஜிஸ்டர் செய்யப்பட்ட கார்டை தேர்ந்தெடுக்கவும். பேமென்ட் மோடை தேர்ந்தெடுத்து, உங்கள் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும். IMPS: IMPS மூலம் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த, உங்கள் வங்கியின் மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, லாகின் செய்யவும். ஆப்-ஐ டவுன்லோட் செய்த பிறகு, IMPS ஆப்ஷன் இணைப்பைப் பெற, ‘பேங்க் அக்கௌன்ட்’ டேப்-ஐ கிளிக் செய்யவும். IMPS பட்டன் மற்றும் ‘Merchant Payment’ டேப்-ஐ கிளிக் செய்யவும். பேங்க் அக்கௌன்ட் விவரங்கள், கிரெடிட் கார்டு எண் போன்ற விவரங்களை சேர்க்கவும். பரிவர்த்தனையை முடிக்க கன்ஃபிர்ம் டேப்-ஐ கிளிக் செய்யவும். இதையும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாள் போனஸ் அறிவிப்பு… யாருக்கெல்லாம்னு தெரியுமா! NEFT: உங்கள் ஆன்லைன் பேங்க் அக்கவுன்ட்டை லாகின் செய்யவும். ‘ஃபண்டு ட்ரான்ஸ்பெர்’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். ‘ட்ரான்ஸ்பெர் டு அதர் பேங்க்’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். கிரெடிட் கார்டு அக்கவுன்ட் மற்றும் பெனிபிஸியரி-யை சேர்க்கவும். உங்கள் விவரங்களை கொடுத்து ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை’ அக்ஸப்ட் செய்யவும். பணம் செலுத்த ‘கன்ஃபிர்ம்’ பட்டனை கிளிக் செய்யவும். ஆட்டோ டெபிட் வசதி: ஆட்டோ டெபிட்டை ரெஜிஸ்டர் செய்ய, முதலில் உங்கள் நெட் பேங்கிங் அக்கவுன்ட்டை லாகின் செய்யவும். வங்கியின் இணையதளம் அல்லது மொபைல் ஆப்-ல் உள்ள ‘கிரெடிட் கார்டு’ பகுதிக்குச் செல்லவும். ‘ஆட்டோ-டெபிட்’ ஆப்ஷனை செக் செய்யவும். ‘ஆட்டோ-டெபிட்’ ஆப்ஷனை கண்டுபிடித்த பிறகு ‘எனேபில்’ ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டுமா அல்லது மொத்த பில் தொகையை செலுத்த வேண்டுமா என்பதை தேர்ந்தெடுக்கவும். பிறகு ஆட்டோ டெபிட்டிற்கான மேக்ஸிமம் அமௌன்ட் லிமிட்டை தேர்ந்தெடுக்கவும். பின்பு இறுதியாக ‘கன்ஃபிர்ம்’ பட்டனை கிளிக் செய்யவும். இதையும் படிக்க: Gold : தங்க நகை வாங்க போறீங்களா..? இந்த 5 விஷயங்களை முக்கியமா கவனிங்க… கஸ்டமர் கேருக்கு கால் செய்யவும். உங்கள் வங்கியின் கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்யவும். கிரெடிட் கார்டு பில் செலுத்தும் செயல்முறைக்கு கஸ்டமர் கேர் சர்வீஸ் ப்ரொவைடர் உங்களுக்கு வழிகாட்டுவார். ஏடிஎம்: உங்கள் டெபிட் கார்டுடன் அருகிலுள்ள ஏடிஎம்மிற்குச் செல்லவும். உங்கள் டெபிட் கார்டை மெஷினில் இன்சர்ட் செய்யவும். ‘கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்’ ஆப்ஷனை தேர்வு செய்யவும். பரிவர்த்தனையை முடிக்க மெஷினில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். வங்கி கிளை அலுவலகம்: உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களுடன் கேஷ் டெபாசிட் ஸ்லிப்பை பூர்த்தி செய்யவும். கவுண்டரில் பணத்துடன் சீட்டை சமர்ப்பிக்கவும். இதையும் படிக்க: இந்த பிரியாணியை ரசிக்கலாம் ஆனால் ருசிக்க முடியாது… கண்ணைக் கவரும் கேண்டில் பிரியாணி… உங்கள் கிரெடிட் கார்டு பணத்தை செலுத்த செக்/டிமாண்ட் டிராப்ட்-டை பயன்படுத்தலாம். செக்கில் 26 இலக்க கிரெடிட் கார்டு எண், கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் பின்பக்கத்தில் கான்டாக்ட் நம்பர் இருக்க வேண்டும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.