BUSINESS

பர்சனல் லோன்ல இவ்வளவு விஷயம் இருக்கா… இது தெரியாம பர்சனல் லோன் வாங்காதீங்க!!!

மெடிக்கல் எமர்ஜென்சியாக இருக்கட்டும், திருமணம் அல்லது வீட்டை புதுப்பித்தல் போன்ற எந்தவிதமான பண தேவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்முடைய பண தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்படுவதால் பர்சனல் லோன்கள் தற்போது அதிக அளவில் பிரபலமாகி உள்ளன. எனினும் பர்சனல் லோன்கள் வாங்குவதற்கு முன்பு அது உங்களுக்கானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த பதிவில் பர்சனல் லோன் வாங்குவதால் ஒருவருக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமை ஆகியவற்றையோடு சேர்த்து பர்சனல் லோன் வாங்கும்போது நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் பார்ப்போம். பர்சனல் லோன் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள் பர்சனல் லோன்கள் விரைவாக ஒரு சில நாட்களிலேயே அப்ரூவ் செய்யப்படுவதால் அவசர பண தேவைகளுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸாக அமைகிறது. திருமணம் முதல் மருத்துவ செலவுகள் அல்லது சிறு சிறு கடன்களை ஒரே கடனாக மாற்றுவது வரை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் பர்சனல் லோன்களை வாங்கலாம். பர்சனல் லோன்கள் அன்செக்யூர்டு லோன்களுக்கு கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த லோன் வாங்குவதற்கு நீங்கள் எந்த ஒரு அடைமானமும் வழங்க தேவையில்லை. பெரும்பாலான பர்சனல் லோன்கள் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதங்களுடன் வருகிறது. எனவே வட்டி மாறிக்கொண்டே இருக்குமே என்பதை நினைத்து நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. பர்சனல் லோன்கள் வாங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் பர்சனல் லோன்கள் அன்செக்யூர்டு லோன்களாக இருப்பதால் இதற்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் நீங்கள் அதிக அளவு தொகையை திருப்பி செலுத்த வேண்டும். பர்சனல் லோன் எடுப்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அதிலும் குறிப்பாக நீங்கள் பேமெண்ட்டை சரியான நேரத்திற்கு செலுத்தாவிட்டால் அது உங்களுடைய கிரிடிட் ஸ்கோரை குறைத்துவிடும். பல கடன் வழங்குனர்கள் பர்சனல் லோன் வாங்கும்போது, அதற்கு பிராசஸிங் கட்டணம், தாமதமாக கடனை செலுத்துவதற்கான அபராதங்கள் மற்றும் பிரீ-பேமென்ட் கட்டணங்கள் போன்றவற்றை வசூலிக்கிறார்கள். பர்சனல் லோனை புத்திசாலித்தனமாக கையாளாவிட்டால் நீங்கள் மிகப்பெரிய கடன் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதையும் படிக்க: குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்குவதற்கு இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!!! பர்சனல் லோன்கள் வாங்கும்போது என்னென்ன செய்ய வேண்டும்? ஒரு பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உங்களுடைய வருமானம் செலவுகள் மற்றும் ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் கடன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்ட பிறகே பர்சனல் லோன் வாங்க வேண்டும். பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஆராய்ந்த பிறகு நீங்கள் எந்த வங்கியில் பர்சனல் லோன் வாங்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும். லோன் ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கு முன்பு முழுவதுமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள வட்டி விகிதங்கள், திருப்பி செலுத்துவதற்கான விதிகள் மற்றும் ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றை படிப்பது அவசியம். பர்சனல் லோனுக்கு நல்ல வட்டி விகிதங்களை பெறுவதற்கு உங்களிடம் அதிக கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே நீங்கள் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்துவது, கிரெடிட் கார்டு பேமென்ட் செலுத்துவது போன்றவற்றை செய்ய வேண்டும். கடன் வாங்குவதற்கு முன்பே அதனை திருப்பி செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மாத பட்ஜெட்டில் இந்த கடன் தொகைக்கான பணத்தையும் சேர்த்து ஒரு திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள். பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு உறவினர்கள், நண்பர்கள் அல்லது உங்களுடைய சேவிங்ஸ் போன்றவை மூலமாக பணத்தை புரட்ட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இதையும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாள் போனஸ் அறிவிப்பு… யாருக்கெல்லாம்னு தெரியுமா! பர்சனல் லோன்கள் வாங்கும்போது செய்யக்கூடாதவை ஒருபோதும் பெரிய தொகைகளை பர்சனல் லோனாக வாங்க வேண்டாம். பிராசசிங் கட்டணம், தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணங்கள், ப்ரீ பேமெண்ட் அபராதங்கள் போன்றவை உங்களுடைய லோன் தொகையை அதிகரிக்கும். எனவே இது போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு பர்சனல் லோனுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் நிறுத்தி நிதானமாக செய்வது அவசியம். பர்சனல் லோன் EMI தொகையை ஒவ்வொரு மாதமும் சரியாக திருப்பி செலுத்துவது அவசியம். அவ்வாறு நீங்கள் தவறவிட்டால் அது அதற்கான அபராதத்தை செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கலாம். பர்சனல் லோன் எடுப்பது உங்களுடைய நீண்ட கால பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப் போகிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இதையும் படிக்க: ரூ.17 லட்சம் வரை கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸின் இந்த சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா? எனவே பர்சனல் லோன் என்பது நீங்கள் புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் போதும், சரியான காரணங்களுக்காக வாங்கும் போது மட்டுமே ஒரு நல்ல ஐடியாவாக இருக்கும். அதன் பின்னணியில் உள்ள ரிஸ்குகளை யோசித்துப் பார்த்து பர்சனல் லோன் வாங்குவது அவசியம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.