BUSINESS

பர்சனல் லோன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும்!!!

உங்களுக்கு பிடித்தமான நாட்டிற்கு செல்வது பற்றி கனவு கண்டு வருகிறீர்களா? ஆனால் அதற்கு தேவையான பணம் இல்லாததால் உங்களுடைய கனவை கைவிட்டு விட வேண்டுமோ என்று யோசனையாக இருக்கிறதா? உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நபருக்கு ஆடம்பரமான ஒரு பரிசை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதா அல்லது எதிர்பாராத செலவு காரணமாக திடீரென்று பெரிய ஒரு தொகை தேவைப்படுகிறதா? இது மாதிரியான எந்த ஒரு பணப் பிரச்சனை இருந்தாலும் சரி, இவை அனைத்திற்கும் பர்சனல் லோன் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. பலருக்கு பர்சனல் லோன் ஒரு பிரபலமான சாய்ஸாக அமைகிறது. ஆனால் பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு அது உங்களுக்கான ஒன்றா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். பர்சனல் லோன் எப்படி இயங்குகிறது? பர்சனல் லோன் என்பது முதன்மையாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், பொருளாதார நிலை மற்றும் தற்போதைய மார்க்கெட் கன்டிஷன் போன்றவற்றின் அடிப்படையில் அமையும். பர்சனல் லோன் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனத்தின் குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒருவேளை அவர்களுடைய இந்த தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் உங்களுக்கு பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படும். அதனைப் பொறுத்து நீங்கள் கடனை எப்படி திருப்பி செலுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம். இப்போது பர்சனல் லோன் பெறுவதற்கான படிப்படியான செயல்முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப செயல்முறை நீங்கள் பர்சனல் லோன் வாங்க நினைக்கும் வங்கியை தேர்வு செய்த பிறகு உங்களுடைய விண்ணப்ப செயல்முறையை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். இதில் தேவையான ஃபார்மால்டிகளை புரிந்து கொண்டு அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். டாக்குமென்ட்களை சமர்ப்பித்தல் பர்சனல் லோனுக்கு விண்ணப்பித்த பிறகு அடுத்தபடியாக நீங்கள் KYC (நோ யுவர் கஸ்டமர்) செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும். இதில் அடையாளச் சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமானம் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மென்ட்டுகள் மற்றும் உங்களுடைய PAN கார்டு போன்ற அத்தியாவசிய டாக்குமென்ட்களை வங்கிக்கு வழங்க வேண்டும். மேலும் வேறு ஏதாவது குறிப்பிட்ட டாக்குமென்ட்டுகளை வங்கி கேட்டாலும் அதனையும் தவறாமல் வழங்க வேண்டும். விண்ணப்ப ஆய்வு உங்களுடைய டாக்குமென்ட்களை சமர்ப்பித்த பிறகு உங்கள் விண்ணப்பத்தை வங்கி ஆய்வு செய்யும். இதற்கு தோராயமாக 5 முதல் 7 வேலை நாட்கள் ஆகும். ஒருவேளை வங்கியின் தகுதி வரம்புகளை நீங்கள் பூர்த்தி செய்துவிட்டால் உங்களுக்கான பர்சனல் லோன் அங்கீகரிக்கப்படும். இதையும் படிக்க: உலகில் வேகமாக வளரும் முதல் 10 முக்கிய பொருளாதார நாடுகள்… பட்டியலில் இந்தியாவின் இடம்… லிஸ்ட் இதோ..! லோன் வழங்கல் பர்சனல் லோன் அங்கீகரிக்கப்பட்ட பிறகு கடன் தொகை உங்களுடைய பேங்க் அக்கவுன்ட்டுக்கு நேரடியாக ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும். பல வங்கிகள் உடனடியாக பணத்தை கிரெடிட் செய்கிறார்கள். ஒரு சில வங்கிகள் 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளலாம். கடனை திருப்பிச் செலுத்துதல் குறிப்பிட்ட லோன் கால அளவுக்குள்ளாக உங்களுடைய பர்சனல் லோனை நீங்கள் திருப்பி அடைக்க வேண்டும். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வங்கி உங்களுடைய பர்சனல் லோனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். இந்த கடனை நீங்கள் மாதவாரியாகவோ அல்லது வருட வாரியாகவோ வங்கியின் நிபந்தனைகளைப் பொறுத்து திருப்பி அடைக்க வேண்டும். பணத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் பல வங்கிகள் குறிப்பிட்ட லோன் கால அளவுக்கு முன்னதாகவே பணத்தை திருப்பிச் செலுத்தும் ஆப்ஷனை வழங்குகின்றனர். எனினும் ஒரு சில வங்கிகள் இதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிப்பார்கள். எனவே உங்களுக்கு எது லாபகரமாக இருக்கும் என்பதை ஆராய்ந்த பிறகு இதில் ஈடுபடுவது நல்லது. இதையும் படிக்க: Gold Rate : ஒரே நாளில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஹேப்பி… இன்றைய விலை நிலவரம் என்ன? உங்களுடைய பர்சனல் லோன் EMI தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் நீங்கள் செலுத்த வேண்டிய மாத EMI எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் யோசிக்கலாம். அது 3 காரணிகளின் அடிப்படையில் உங்களுடைய EMI தொகை நிர்ணயிக்கப்படும். கடன் தொகை நீங்கள் பெரிய தொகையை கடனாக வாங்கினால் அதிக வட்டி மற்றும் அதிக EMI செலுத்த வேண்டும். உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவது என்பது உங்களின் பொருளாதார நிலைப்பாடு மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் லோன் கால அளவை பொறுத்து அமையும். லோன் கால அளவு நீங்கள் நீண்ட திருப்பிச் செலுத்தும் கால அளவை தேர்வு செய்தால் உங்களுடைய EMI தொகை குறையும். ஆனால் நீங்கள் அதிக அளவில் வட்டி கட்ட வேண்டி இருக்கும். எனவே குறைவான திருப்பிச் செலுத்தும் கால அளவை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். வட்டி விகிதம் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் தற்போதைய மார்க்கெட் நிலவரங்களைப் பொறுத்து வட்டி விகிதத்தை வங்கிகள் நிர்ணயிக்கும். குறைவான வட்டி விகிதம் ஓரளவு உங்களுடைய EMI தொகையை குறைத்து உங்களுடைய ஒட்டுமொத்த பொருளாதார சுமையை குறைத்துக் கொடுக்கும். பர்சனல் லோனுக்கான வட்டி விகிதத்தை கணக்கிடுவது எப்படி? வட்டி விகிதங்கள் வங்கியைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அதனை கணக்கிடுவதற்கு பயன்படும் ஃபார்முலா எளிமையானது. ஒரு வருடத்திற்கான வட்டியை கணக்கிட உதவும் ஃபார்முலா:- ஆண்டுவாரியான வட்டி- 12*P*R*T P என்பது வங்கியில் இருந்து நீங்கள் வாங்கிய கடன் தொகை R என்பது வட்டி விகிதம் T என்பது வருடங்களில் கால அளவு மாத வட்டி கணக்கீடு P*R*T*/12 இப்போது ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் 12 லட்சம் ரூபாயை 11% வட்டிக்கு கடனாக வாங்கி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆகவே இந்த வட்டித்தொகைக்கு நீங்கள் 11,000 ரூபாயை EMI-யாக செலுத்த வேண்டும். இதையும் படிக்க: பென்சன் வாங்குபவரா நீங்கள்.. இந்த மோசடி பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் பர்சனல் லோன் பெறுவதற்கான தகுதி வரம்புகள் தகுதி வரம்புகளும் வங்கியைப் பொறுத்து வேறுபடலாம். அவற்றில் சில பொதுவான காரணிகளை இப்போது பார்க்கலாம். வயது பொதுவாக பர்சனல் லோன் பெறுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் 21 வயதை அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் கடனை திருப்பிச் செலுத்தும்போது 60 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இது வங்கியைப் பொறுத்து மாறுபடும். வேலை உங்களிடம் ஒரு நிலையான வேலை இருப்பது அவசியம். சுய தொழில் செய்பவர்கள் அதன் மூலமாக அவர்கள் தொடர்ச்சியான வருமானத்தைப் பெறுவதற்கான நிரூபணத்தை காண்பிக்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் நல்ல கிரெடிட் ஸ்கோர் உங்களுடைய பொருளாதார நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறது. அதே சமயம் உங்களுக்கு குறைவான வட்டி விகிதத்தை பெற்றுத்தரும். பொதுவாக 750 அல்லது அதற்கும் மேற்பட்ட சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களை வங்கிகள் தேர்வு செய்வார்கள். இதையும் படிக்க: நடப்பாண்டில் தங்கம் வாங்குவதை ரிசர்வ் வங்கி குறைக்கலாம்… உலக தங்க கவுன்சில் தகவல் பர்சனல் லோன் உங்களுக்கு சரியானதாக இருக்குமா? பர்சனல் லோன்கள் பலருக்கு சிறந்த ஆப்ஷனாக அமைகிறது. ஆனால் அதிக வட்டி விகிதங்கள் என்று வரும்போது, அது உங்களுடைய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கலாம். உங்களுடைய வருமானம் மற்றும் செலவுகளை ஒழுங்காக அமைத்துக் கொள்ளாவிட்டால் மிகப்பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்ள நேரலாம். மேலும் பர்சனல் லோனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் கையெழுத்திடும் டாக்குமென்ட்கள் மற்றும் விதிகள் நிபந்தனைகள் போன்றவற்றை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்வது அவசியம். பெரிய தொகைகள் அல்லது நீண்ட கால அளவு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சரியான முடிவுகளை எடுப்பதன் மூலமாக பர்சனல் லோனை நீங்கள் திறமையாக கையாளலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.