BUSINESS

கோரை பாய் பிசினஸ்: ஒருமுறை உழுது விதைச்சா போதும்... 20 வருஷத்துக்கு லாபம் பாக்கலாம்

கோரை பாய் உற்பத்திகோரை பாய் உற்பத்தி நாமக்கல் மாவட்டம் வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். அதுக்காக வளம் இல்லாத மாவட்டம் என்று கூற முடியாது. நாமக்கல்லில் நிலத்தில் விளையும் கோரைப்புல் உலகளவில் ஃபேமஸ். அதுதான் நாமக்கல்லின்அடையாளம்னு கூடச் சொல்லலாம். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் கோரை புல் விவசாயம் நடைபெறுகிறது. அந்தவகையில் கோரைப்புல் விவசாயத்தைப் பொறுத்தவரை ரொம்ப மெனக்கிடணும்னு அவசியம் இல்லை. ஒருமுறை நிலத்தை உழுது விதைச்சுட்டா அடுத்த 20 வருஷத்துக்கு கவலையில்லாமல் இருக்கலாம். தரமான உரமும், வாரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினா போதும். ஆறு மாசத்துக்கு ஒரு முறை அறுவடை செய்யுற மாதிரி புல்லு செழிச்சு வளர்ந்துரும். முதல்முறை அறுவடை செய்ய மட்டும் பத்துமாசம் ஆகும். அடுத்தடுத்த முறை ஆறு மாசத்திலேயே அறுவடை செய்ய முடியும். ஒரு கோரைப்புல் கட்டுக்கு 30 ரூபாய் கிடைக்கும். வாரத்துக்கு 300 கட்டு வரை விற்பனை செய்வார்கள். புல்லு நல்ல வளமாக இருந்தால்தான் அதை அறுவடை செய்து பாய் நெய்ய ஆரம்பிப்பார்கள். மாசத்துக்கு 6,000 பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. மாத வருமானம் சுமார் 4 லட்சம் வரை வருவதாக பாய் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையும் வாசிக்க: “நோ காஸ்ட் - நோ டென்ஷன்” - பெண்களின் கனவை பூர்த்தி செய்யும் கீதா… கோரைபுல் பாய் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா நன்கு வளர்ந்த கோரைப் புற்களை அறுவடை செய்து அதை நன்கு காய வைத்து காய வைத்த கோரை புற்களை தனித்தனியாக வெட்டி எடுத்து மறுபடியும் வெயிலில் காய வைப்பார்கள். நன்கு காய்ந்த கோரை புல்லை இரண்டு மூன்றாக தனித்தனியாக வெட்டி எடுத்து மறுபடியும் வெயிலில் காய வைத்து பாய் தயாரிக்கும் பதத்திற்கு புல் வந்தவுடன் நுனிப்பகுதியிலும் அடிப்பகுதியில் வெட்டி எடுத்து பாய் தயாரிக்கும் இயந்திரத்தில் வைத்துவிடுவார்கள். ஒவ்வொரு கோரை புல்லை சேலை நெய்வது போல் ஒன்றை பின் ஒன்றாக அடிக்கி பாயாக தயார் செய்யப்படுகிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.