BUSINESS

பெருமழைக்கும் மடியாத நெல் ரகம்... இதை பயிரிட்டால் விவசாயிகளுக்கு கவலையே இல்லை...

காட்டுயானம் அரிசி காலப்போக்கில் உணவு பொருட்களின் அதிக உற்பத்தி தேவையால் பசுமைப் புரட்சிக்கு பிறகு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் நிலவியது.‌ குறைந்த விலையில் அனைவருக்கும் உணவு கிடைத்தாலும் எதிர்கால விவசாய நலனையும், உடல் நலனையும் பாதிப்பது பசுமைப் புரட்சியின் தீமையாக இருக்கிறது.‌ இப்படியான சூழலில் நம் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நெல் பற்றி பலருக்கும் தெரியாத நெல்லின் தன்மைகள், மற்றும் அதன் மகத்தான நன்மையைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம். காட்டுயானம் நெல் சம்பா பட்டத்தில் பயிரிடப்படுகிறது. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. மற்ற நெல் ரகங்களை விட உயரமாக வளரும் தன்மை கொண்டது என்பதால் மழை நீரால் பயிர் மூழ்கும் அபாயம் இதில் ஏற்படாது. ஆகையால் மற்ற ரகத்தை போல் எளிதில் அழுகும் அபாயமும் இல்லை. அமிர்த கரைசலுடன் கலந்த இதன் வைக்கோல் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு நல்ல உணவாகும். மற்ற நெல் பயிர்களை காட்டிலும் இது உயரமாக வளரும். அதாவது ஒரு காட்டு யானைஒளிந்திருக்கும் அளவிற்கு 7 அடி தூரம் வளர்வதால் காட்டு யானம்எனபெயர் பெற்றது. உளவியல் தன்மைகளைப் பார்த்தோமானால், சாயும் தன்மையுடையது .இந்தப் பயிரின் கால அளவு 150 நாட்களாகும். இதன் அதிகபட்சம் உயரம் 180செ.மீ வரை வளரும். இந்த நெல்மணியின் இயல்புகளைப் பொருத்தவரையில்.. ஆயிரம் நெல்மணிகளின் எடை 29.00 கிராம் ஆகும். சிவப்பு நிறமோட்டா அரிசி எனகூறப்படுகிறது. மகசூலைப் பொறுத்தவரையில் உதாரணமாக ஒரு ஏக்கருக்கு 900 கிலோ நெல் மற்றும் 1400 கிலோ வைக்கோல் கிடைக்கும். காட்டுயானம் அரிசியின் நன்மைகள்:- காட்டுயானம் அரிசியில்புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது. அதாவது தசை சிதைவு, சோர்வு, எடை இழப்பு, பலவீனம், எடிமா, இரத்த சோகை மற்றும் காயம் தாமதமாக ஆறுதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த அரிசி ஒரு அருமருந்து. அதோடு மட்டுமா? உடல் எடையைக்குறைக்க நினைப்பவர்கள், மற்றும் உடற்பயிற்சி நிலையம் செல்பவர்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த அரிசி சிறந்தது. முக்கியமாக இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. இந்த அரிசியைத்தொடர்ந்து உண்டு வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதையும் வாசிக்க:அரிசியை ஊற வைத்து சமைப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்ன தெரியுமா..? காட்டுயானம்அரிசியை உண்ணும் போது உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை உடனடியாக போக்குகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது.‌ நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த அரிசி ஒரு அருமருந்து. இந்த அரிசியைத் தொடர்ந்து உண்டுவந்தால் அவர்கள் உடலை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. சரும பாதுகாப்பு மற்றும் வயதான தோற்றத்தை குறைக்கிறது. பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.தசைப்பிடிப்பு, மூட்டு பலவீனம்,முக்கியமாக பக்கவாதம்,குறைந்த இரத்த அழுத்தம், சேர்வு, மலச்சிக்கல், இதய பிரச்சனைகள், பார்வை தொடர்பான பிரச்சினைகள்,முடி உதிர்தல், பாலியல் செயலிழப்பு, போன்ற பொட்டாசியம், துத்தநாகத்தால் ஏற்படும் இப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், அதன் சத்தை மேம்படுத்தி சமநிலையில் வைப்பதற்காகவும்,‌காட்டுயானம்அரசி உதவுகிறது. முக்கியமாக அதிக அளவில் இரும்பு, பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துகளும், நிறைந்துள்ளது. அதிகப்படியான மாதவிடாய் இரத்த இழப்பு, தசை மற்றும் எலும்பு பிரச்சனைகள், ஆகியவற்றை தீர்ப்பதோடு இவை அனைத்தையுமே மேம்படுத்தி உடல் நலனை காக்கும் உன்னதமான ஒரு நெல் ரகமாக இருக்கிறது. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.