BUSINESS

PM Awas Yojana 2.0 : பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தில் வீட்டு மானியம் பெறுவது எப்படி? - விவரம் இதோ!

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தில் வழங்கிய வீட்டு கடன் மானியத்தை அரசாங்கம் திரும்ப பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. அதை தவிர்ப்பதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே திட்டத்தின் நோக்கமாகும். Also Read: உலகில் வேகமாக வளரும் முதல் 10 முக்கிய பொருளாதார நாடுகள்… பட்டியலில் இந்தியாவின் இடம்… லிஸ்ட் இதோ..! இந்நிலையில் சமீபத்தில் PMAY 2.0-ஐ அரசு அறிமுகப்படுத்தியது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் மானியத்தை அரசாங்கம் திரும்ப பெறலாம் என்பது பல பயனாளிகளுக்கு தெரியாது. இந்த திட்டத்தை நீங்கள் பயன்படுத்தி கொள் விரும்பினால், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். PMAY 2.0 திட்ட விதிகள்: EWS: இந்த வகையில் பயன்பெறும் நபர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். LIG: இந்த வகை பயனாளிகளின ஆண்டு வருமானம் ரூ.3 முதல் 6 லட்சம் வரை இருக்க வேண்டும். MIG: இந்த பிரிவை சேர்ந்தவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 முதல் 9 லட்சம் வரை இருக்க வேண்டும். கடன் மானியத்தை எந்த காரணங்களுக்காக அரசு திரும்ப பெறும்? கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல், அவருடைய கணக்கு NPAஆக இருந்தால் திரும்ப பெறப்படும். ஏற்கனவே மானியம் விடுவிக்கப்பட்டு, சில காரணங்களால் வீடு கட்டும் பணி நிறுத்தப்பட்டிருந்தால் திரும்ப பெறப்படும். பயன்பாடு அல்லது இறுதி பயன்பாட்டு சான்றிதழ் ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் கடன் மானியம் திரும்ப பெறப்படும். PMAY மானியம் பெறுவது எப்படி? இந்த திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடன் மானியம் பயனாளியின் கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், அவர்களின் இஎம்ஐ குறைக்கப்படுகிறது. இதன் கீழ், பொருளாதாரத்தில் நலிவடைந்தபிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் கொணட குழுவினர் 6.5 சதவீத வட்டி மானியத்தை பெறுகின்றனர். Also Read: அனைத்து பெண்களுக்கும் இலவச வாஷிங் மெஷின்… மத்திய அரசு திட்டம் - உண்மை என்ன? மானியம் திரும்ப பெறப்பட்டால், கடன் வாங்குபவரின் இஎம்ஐ அதிகரிக்கலாம் என தெரிகிறது. கடன் பெறும் நபர், எந்த சூழ்நிலையில் மானியத்தை திரும்ப பெறலாம் என்பதை அறிய, தனது வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். இது தவிர, பயன்பாட்டு சான்றிதழ் மற்றும் வருமான சான்றிதழ் போன்ற ஆவணங்களை வைத்திருப்பதும் அவசியம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.