BUSINESS

ஃபோர்ப்ஸ் இந்தியா பட்டியல்... கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்வு - காரணம் இதுதான்!

இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த ஆண்டை விட, மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலான டாப் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2024ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். 2023ம் ஆண்டை விட, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதனால், தற்போது 119.5 பில்லியன் டாலர்களுடன் அவர் முதலிடத்தை பெற்றுள்ளார். பட்டியலில் கெளதம் அதானி, இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். அதானி குடும்பத்தின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராக உள்ளது. O.P. ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால், கடந்த ஆண்டை விட 19.7 பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டி, 43.7 பில்லியன் டாலர்களுடன் முதல் முறையாக பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார். நான்காவது இடத்தில் 40.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் உள்ளார். ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் மென்பொருள் நிறுவனத்தின் நிறுவன தலைவராக இருந்தார். தற்போது அந்நிறுவனத்தின் தலைவர் பதவியை அவரின் மகள் ரோஷ்னி அலங்கரித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் சர்ப்ரைஸாக சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திலிப் ஷாங்வி இந்த ஆண்டு மூன்று இடங்களில் முன்னேறி, 5வது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 32.4 பில்லியன் டாலர். இது கடந்த ஆண்டைவிட 13 பில்லியன் டாலர் அதிகம். இதனை தொடர்ந்து, ராதாகிஷன் தமானி 31.5 பில்லியன் டாலர் மதிப்புடன் 6ம் இடமும், சுனில் மிட்டல் 30.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 7ம் இடமும், குமார் பிர்லா 24.8 பில்லியன் டாலர் மதிப்புடன் 8வது இடமும், சைரஸ் பூனவல்லா 24.5 பில்லியன் டாலர் மதிப்புடன் 9வது இடமும், பஜாஜ் குடும்பம் 23.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடமும் பிடித்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் நான்கு பேர் புதிய முகங்கள் இடம் பிடித்துள்ளனர். அதேநேரம், கடந்த ஆண்டில் இடம்பெற்றிருந்த 11 பேர் இந்த பட்டியலில் இருந்து வெளியேறியதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. Also Read | டாடா குழுமத்தின் அடுத்த தலைவர் மாயா? இவர் யார் தெரியுமா? டிரில்லியன் டாலர் மதிப்பு…: இந்தியாவின் 100 பணக்காரர்களின் சொத்துக்களின் கூட்டு மதிப்பு மொத்தமாக, முதன்முறையாக டிரில்லியன் டாலர் மதிப்பைத் தாண்டியுள்ளது ஃபோர்ப்ஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 100 பணக்காரர்களின் சொத்துக்களின் கூட்டு மதிப்பு 799 பில்லியன் டாலர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 1.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்த புதிய உச்சத்துக்கு காரணம், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமே. இந்திய பங்குச் சந்தைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 30% அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த 58 பேரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகரித்தது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.