BUSINESS

உங்களுக்கு EPFO இருக்கிறதா..? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்

PF உறுப்பினரா நீங்கள்?. அப்படியென்றால் உங்களுக்கு தான் இந்த செய்தி. EPFO அதன் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசை அளிக்கவுள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மேம்படுத்த அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல வித மாற்றங்களை செய்யவும் அரசு தயாராகி வருகிறது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை தற்போதைய ரூ.1000-ல் இருந்து அதிகரிப்பது, ஓய்வுபெறும் போது பகுதியளவு தொகையை எடுக்க அனுமதிப்பது, மாதத்திற்கு ரூ.15,000க்கு மேல் மாத வருமானம் உள்ளவர்களுக்கும் ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்துவது ஆகியவை இந்த மாற்றங்களில்அடங்கும். இதற்காக செப்டம்பர் மாதத்திலேயே ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்களை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Also Read: Weather Update : தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை மையம் அலர்ட்! ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்கள் இபிஎஃப் சந்தாதாரர்களுக்காக (EPF Subscribers) பல முக்கிய மாற்றங்களை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இந்த மாற்றங்களை செய்வதில் அரசு தீவிரமாக உள்ளதாகவும், தொழிலாளர் அமைச்சகம் ஏற்கனவே IT உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் EPFO செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு இன்னும் எளிதாகவும் துரிதமாகவும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் EPFO இடம் நீண்ட புகார் பட்டியல் இருப்பதாகவும், இவை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த புகார்கள் உரிய நேரத்தில் தீர்க்கப்படுவதில்லை என கூறப்படும் நிலையில், அதை சரிசெய்ய ஐடி உள்கட்டமைப்பில் மாற்றங்களை செய்ய ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது. ஓய்வுபெறும் போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) எளிதாக பணம் எடுக்க முடிவதை உறுதி செய்யு மாறு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தி உள்ளார். இதன் மூலம் அவர்களது நிதித் திட்டமிடல் உறுதி செய்யப்பட்டு, உறுப்பினர்கள் தங்கள் வருடாந்திர ஓய்வூதியத் தொகையில் தேவைப்பட்டால் மாற்றங்களை செய்வதும் எளிதாக இருக்கும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தீபாவளி பரிசாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். Minimum Monthly Pension: குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் சூடுபிடித்துள்ளன. பல ஊழியர் ஓய்வூதியர் (employee pensioner) சங்கங்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளன. Wage Ceiling Hike: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கணக்கிடுவதற்கான ஊதிய வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. செப்டம்பர் 1, 2014 முதல், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான ஊதிய வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. EPF Withdrawal: பல வித மாற்றங்களின் மூலம், NPS-இன் கீழ் பணத்தை எடுப்பது போல, இபிஎஃப்ஓ -விலும் பணம் எடுக்கும் முறை மாற்றப்படலாம் என கூறப்படுகின்றது. சமீபத்தில் அரசு இபிஎஃப் கணக்கிலிருந்து (EPF Account) அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்தது. மேலும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஊழியர்கள் அதற்கு முன்னரும் பணத்தை எடுக்கலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.