BUSINESS

பென்சன் வாங்குபவரா நீங்கள்.. இந்த மோசடி பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

ஓய்வூதியம் பெறுவோர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அறிவுறுத்தி உள்ளது. இந்த புதிய மோசடியில் உங்கள் ஓய்வூதியத்தை நிறுத்துவதாக மிரட்டுவதாகவும், உங்கள் சுய விவரங்களைச் சரிபார்ப்பதாகவும் கூறி உங்களை ஏமாற்றுவார்கள். எனவே இவர்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி அறிய மத்திய ஓய்வூதியக் கணக்கியல் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே விரிவாக பார்க்கலாம். புது டெல்லியில் உள்ள மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகத்தின் (CPAO) அதிகாரிகள்போல் நடித்து, ஓய்வூதியம் பெறுபவர்களை குறிவைத்து மோசடி செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த மோசடி செய்பவர்கள் போலியான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புகிறார்கள், ஓய்வூதியதாரர்களிடம் தவறான படிவங்களை நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களிடம் அவர்களின் ஓய்வூதிய பணத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டுகின்றனர். இது குறித்து வெளியான அறிக்கைகளின்படி, மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO) எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். பெறப்படும் இந்த தகவலைக் கொண்டு, அவர்கள் அடையாளத் திருட்டு மற்றும் நிதி மோசடி செய்யலாம். எனவே, ஓய்வூதியம் பெறுவோர் எச்சரிக்கையாக இருக்கவும், இந்த அச்சுறுத்தல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்து, நிதி மோசடிகளை தடுக்கலாம். இதையும் படிக்க: Gold Rate Today: தங்கம் வாங்க சரியான நேரம்…. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? CPAOலிருந்து வந்ததாகக் கூறும் எந்தவொரு செய்தியின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். அதிகாரப்பூர்வ ஏஜென்சிகள் வாட்ஸ்அப் அல்லது பிற முறைசாரா தளங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதில்லை. உங்கள் PPO எண், பிறந்த தேதி மற்றும் வங்கி விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை வாட்ஸ்அப் உள்ளிட்ட மற்ற பயன்பாடுகள் மூலம் பகிர்வதை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் சந்தேகத்திற்கிடமான மெசேஜைப் பெற்றால், CPAO அல்லது உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜில் உள்ள தொடர்பு விவரங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். இதுபோன்ற பொதுவான மோசடிகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ளுங்கள். இதன்மூலம் உங்கள் நிதி இழப்பை தவிர்க்க முடியும் மற்றும் இந்த தகவலை உங்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் அல்லது மற்ற ஓய்வூதியதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மோசடியை எதிர்கொண்டால், மற்றவர்கள் பலியாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மோசடி குறித்து புகாரளிக்கவும். இதையும் படிக்க: PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தின் 18வது தவணை வரவில்லையா..? அப்போ உடனே இத பண்ணுங்க..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து, நிதி மோசடிகளை தடுக்கலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.