NEWS

விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?

விநாயகப் பெருமான் முதல் மரியாதைக்குரிய தெய்வம். எந்த ஒரு சுப காரியம் மற்றும் வழிபாடு தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழிபடுவார்கள். மகிழ்ச்சி மற்றும் செழுமையின் கடவுள் விநாயகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதோடு அவரது அருளால் வாழ்க்கையின் அனைத்து பணிகளும் தடையின்றி நிறைவேறும். இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்புகள் நிறைந்த விநாயகப் பெருமானின் தும்பிக்கையைப் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடையே உள்ளது. வீட்டில் விநாயகப் பெருமானின் சிலையை வைக்கும் போதெல்லாம் அவரின் தும்பிக்கை இடது கையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய சிலை வீட்டில் நேர்மறை ஆற்றலை நிலைக்க செய்கிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வருகிறது. நேரான தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையையும் வீட்டில் வைக்கலாம். இதனால் வீட்டின் சூழல் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்கும். இதையும் படிக்க: தீபாவளி அன்று தரிசிக்க வேண்டிய டாப் 5 கோயில்கள்… பட்டியல் இதோ! சில சிலைகளில், விநாயகப் பெருமானின் தும்பிக்கை இடது பக்கமாகவும், சிலவற்றில் வலது பக்கமாகவும் இருப்பதை பார்த்திருப்போம். விநாயகப் பெருமானின் பெரும்பாலான சிலைகள் நேராகவோ அல்லது தும்பிக்கையுடன் வடக்கு நோக்கியோ இருக்கும். விநாயகப் பெருமானின் சிலையை தெற்கு நோக்கி அமைக்கும் போதெல்லாம் அது உடைந்து போவதாக பொதுவாக நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. விநாயகப் பெருமானின் தும்பிக்கை நேராக இருக்கும் போது அதனை மூன்று திசைகளிலிருந்தும் காண முடியும். வலது பக்கமாக தும்பிக்கையை கொண்டுள்ள சிலையானது தடைகளை அழித்தல், எதிரிகளை தோற்கடித்தல், வெற்றி பெறுதல், உக்கிரம் மற்றும் சக்தியை வெளிப்படுத்துதல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.இடது பக்கம் வளைந்த தும்பிக்கையுடன் கூடிய சிலை நிரந்தர நோக்கங்களுக்காக வழிபடப்படுகிறது. கல்வி, செல்வம், வியாபாரம், முன்னேற்றம், குழந்தை பாக்கியம், திருமணம், குடும்பத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றிற்காக வழிபடப்படுகிறது. இடது கை பக்கமாக உள்ள தும்பிக்கை கொண்டுள்ள விநாயகர் சிலையின் சிறப்புகள்: விநாயகப் பெருமானின் தும்பிக்கை இடது பக்கம் வளைந்து காணப்பட்டுவது நமது இட நாடியைக் குறிக்கிறது. சூரியன் மற்றும் சந்திரனின் மூச்சுப் பரிமாற்றத்தின் போது, ​​​​இரண்டு துளைகள் நம் மூக்கில் வருகின்றன. நாம் இடது மூக்கின் வழியாக சுவாசிக்கிறோம் என்றால், நமது இடது ஸ்வரம் வேலை செய்கிறது, நமது இட நாடி விழித்திருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் நமது நாள் அமைதியாகவும் நிலையானதாகவும் இருக்கும் என்று அர்த்தம். வீட்டின் இடதுபுறத்தில் தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் சிலையை நிறுவினால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் உண்டாகும். வீட்டில் சாதகமான சூழல் நிலவும். விநாயகப் பெருமானின் அருள் நம் மீது இருக்கட்டும்.எப்போதும் இருக்கும். இதையும் படிக்க: வீட்டில் குபேரன் சிலை வைப்பது நல்லதா? கெட்டதா? வலது கை பக்கமாக உள்ள தும்பிக்கை கொண்டுள்ள விநாயகர் சிலையின் சிறப்புகள்: நாம் நம்முடைய வலது மூக்கின் வழியாக சுவாசிக்கிறோம் என்றால், நமது வலது ஸ்வரம் செயல்படுகிறது என அர்த்தம். இதன் மூலம் நமது நாள் ஆற்றல்மிக்கதாக இருக்கும் என்பது பொருள். விநாயகர் சிலை வலது பக்கம் வளைந்திருக்கும் தும்பிக்கையை கொண்டு இருந்தால் அதன் மூலம் வீட்டில் உள்ள பெரிய கஷ்டங்கள் கூட விலகும் என்பது நம்பிக்கை. விநாயகப் பெருமானின் சிலைகளில் தும்பிக்கையின் திசையைப் பற்றிய நம்பிக்கைகள்: 1. இடதுபுறம் வளைந்த தும்பிக்கையுடன் கூடிய விநாயகர் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த சிலைகள் அமைதியானதாகவும், நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. இந்த சிலைகள் தடைகளை அழிப்பவை என்றும் அழைக்கப்படுகின்றன. 2. விநாயகரின் தும்பிக்கை வலது பக்கம் வளைந்த நிலையில் இருப்பது சித்திவிநாயகர் எனப்படும். தடைகளை அழித்தல், எதிரிகளை தோற்கடித்தல், வெற்றியை அடைதல், உக்கிரம் மற்றும் சக்தியை வெளிப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு இந்த சிலையை வழிபடுவது பெரும் பலனை அளிக்கிறது. 3. விநாயகப் பெருமானை தும்பிக்கை இடது பக்கம் வளைந்து இருந்தால், நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதுடன், மரண பயம் நீங்கும். பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. நியூஸ்18 தமிழ்நாடு இது தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் செயல்படுத்துவதற்கு முன்புசம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.