NEWS

மார்க்கெட்டை வலம் வரும் போலி பன்னீர்… எச்சரிக்கையாக இருக்க இதை தெரிஞ்சுக்கோங்க..!

B2B பிளாட்பார்மான Zomato Hyperpure மூலமாக Zomato நிறுவனம் போலியான பன்னீரை ரெஸ்டாரண்டுகளுக்கு விற்பனை செய்து வருவதாக குருகிராமை சேர்ந்த ஒரு நபர் குற்றம் சாட்டியுள்ளார். டிக்கா மற்றும் கிரேவி பன்னீர் உணவுகளுக்கு ஏற்ற அனலாக் பன்னீர் என்று இந்த ப்ராடக்ட் Zomato Hyperpure வெப்சைட்டில் குறிக்கப்பட்டுள்ளது. அனலாக் பன்னீர் என்றால் என்ன? மென்மையான இந்திய சீஸ் என்றும் அழைக்கப்படும் பன்னீர் பல்வேறு வகையான குழம்பு வகைகள், இனிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவுப் பொருள். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நொய்டாவில் 47 கெட்டுப்போன பன்னீர் மற்றும் கோயா ப்ராடக்டுகளை கண்டுபிடித்தனர். அதேபோல மே மாதத்தில் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள இரண்டு டைரி நிறுவனங்களிடமிருந்து 1300 கிலோ போலியான பன்னீர் கைப்பற்றப்பட்டது. சிந்தடிக் பன்னீர் அல்லது அனலாக் பன்னீர் என்றும் அழைக்கப்படும் போலியான பன்னீரின் மார்க்கெட் இந்தியாவில் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த பன்னீர் வழக்கமான பன்னீரை விட பாதி விலையில் கொடுக்கப்படுகிறது. இது பாலில் இருந்து தயாரிக்கப்படும் அதே வழக்கமான பன்னீரைப் போலவே இருக்கிறது அதன் சுவையும் கிட்டதட்ட அசல் பன்னீரைப் போலவே உள்ளது. போலியான பன்னீர் என்பது விலை மலிவான அல்லது தரமற்ற காய்கறி எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது வழக்கமான பன்னீருக்கு ஒரு மாற்றாக அமைகிறது. வழக்கமான பன்னீர் என்பது பாலில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து அதனை திரைய வைத்து அதிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதுவே அனலாக் பன்னீர் என்பது முழுக்க முழுக்க எமல்சிஃபையர்கள், காய்கறி எண்ணெய் ஸ்டார்ச் கொண்டு செய்யப்படுகிறது. பாலில் இருந்து தயாரிக்கப்படும் வழக்கமான பன்னீர் என்பது புரோட்டின், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சிறந்த மூலமாக அமைகிறது. இதுவே அனலாக் பன்னீர் குறைந்த புரோட்டீன் அளவை கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் பெரும்பாலும் டிரான்ஸ்ஃபேட் அல்லது சாச்சுரேட்டட் ஃபேட் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகளால் நிறைந்துள்ளது. இந்தியாவில் அனலாக் பன்னீர் விற்பனை செய்வது சட்டத்திற்கு புறம்பான காரியம் அல்ல. எனினும் அதனை அனலாக் பன்னீர் அல்லது நான்-டைரி என்று லேபிளில் குறிப்பிடாமல் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தெரிவித்துள்ளது. அனலாக் பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அனலாக் பன்னீரில் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது. இதனால் இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். விலை மலிவான காய்கறி எண்ணெய், ஸ்டார்ச்சில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பன்னீரில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக உள்ளது. இது கொழுப்புகளின் மிக மோசமான வகை கொழுப்பாக கருதப்படுகிறது. இது உணவு சார்ந்த கொழுப்புகள் இல்லை என்ற காரணத்தால் நம்முடைய உடலின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து அதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. நமது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி, டயாபடீஸ், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கான முக்கிய காரணியாக அமைகிறது. டிரான்ஸ்ஃபேட்டை அதிக அளவு சாப்பிட்டால் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல் அனலாக் பன்னீர் வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இதனால் வாந்தி, பேதி மற்றும் குமட்டல் ஏற்படும். போலியான பன்னீரை கண்டுபிடிப்பது எப்படி? பாலை திரைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை பன்னீர் உறுதியான அமைப்பையும், பால் வாசனையையும் கொண்டிருக்கும். ஒரு பன்னீரின் அமைப்பு மற்றும் சுவையை வைத்தே அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம். வழக்கமான பன்னீரை சூடுபடுத்தும் போது அது பழுப்பு நிறமாக மாறும். இதுவே போலியான பன்னீர் விரைவாக உருகிவிடும். போலியான பன்னீரை கண்டுபிடிப்பதற்கு அயோடின் சோதனையும் உதவும். இதற்கு ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பன்னீரை கொதிக்க வையுங்கள். இதில் ஒரு சில துளிகள் அயோடின் சேர்க்கவும். இப்போது பன்னீர் நீல நிறமாக மாறினால் அது போலியானது. போலி பன்னீரை கண்டுபிடிப்பதற்கு துவரம் பருப்பு சோதனையையும் நீங்கள் பயன்படுத்தலாம். இதற்கு கொதிக்க வைத்த பன்னீரை ஆறவைத்து அதில் சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து 10 நிமிடங்கள் அப்படியே விடவும். தண்ணீர் சிவப்பு நிறமாக மாறினால் அது கெட்டுப்போன பன்னீரை குறிக்கும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.