NEWS

#BoycottSaiPallavi இணையத்தில் டிரெண்டாக என்ன காரணம்? சாய் பல்லவி பேசியது என்ன?

காஷ்மீர் பைல்ஸ் பற்றியும் பசு பாதுகாவலர்களின் தாக்குதல் குறித்தும் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாய் பல்லவி பேசிய இந்த வார்த்தைகள் தான் தற்போது அவருக்கு எதிராக BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக் வைரலாக காரணமாகி உள்ளது. சாய் பல்லவி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு விரத பர்வம் என்னும் திரைப்படம் வெளியானது. 1990களில் வாழ்ந்த மாவோயிஸ்டுகளின் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில், மாவோயிஸ்ட்டை காதலிக்கும் வெண்ணிலாவாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது, நக்சல் சீருடை அணிந்துகொண்டு, துப்பாக்கி பிடித்து நடித்தது எப்படி இருந்தது என்று நேர்காணல் செய்த நபர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்திருந்த சாய் பல்லவி, பாகிஸ்தானில் இருக்கும் மக்கள் இந்திய ராணுவத்தை பயங்கரவாதிகள் என செல்லுவார்கள் என்றும், அதுபோல் இருதரப்புக்கும் பார்வைகள் மாறும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தனக்கு வன்முறை குறித்தும், எது சரி எது தவறு என்பது குறித்தும் புரிந்துகொள்வது கஷ்டம் என்றும் கூறிய சாய் பல்லவி, துப்பாக்கி தூக்குவதால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என மாவோயிஸ்டுகள் என்று கூறப்படும் மக்கள் நம்பியதாக கூறியிருந்தார். காஷ்மீர் பைல்ஸ் படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் என்ன இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதை காட்டியதாகவும் அதே போல் பசுக்களை ஏற்றிச் சென்றவர்கள் இஸ்லாமியராக இருந்தால் அவரை அடித்து ஜெய் ஸ்ரீராம் என சொல்ல வைத்தார்கள் என்றும் சாய் பல்லவி சுட்டிக்காட்டினார். Also Read : ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் இவர்தான்… யாருன்னு தெரியுமா? இந்த பேட்டி அப்போதே பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், தனது தரப்பு விளக்கத்தை சாய் பல்லவி தந்திருந்தார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் வெளியாகும் இந்த சூழலில் இப்பிரச்னை மீண்டும் தலைதூக்கி உள்ளது. மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில் நடித்துள்ள சாய்பல்லவி படப் பிரமோஷனுக்கு மத்தியில், ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒரு தரப்பினர் இந்திய ராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் என்ற தோணியில் பேசியவர், ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதையும் அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதையும் ஏற்கமுடியாது என்று கூறி வருகின்றனர். மேலும், தங்கல் போன்ற பெரிய வெற்றி படங்களை இயக்கிய நித்தேஷ் திவாரி தற்போது ராமாயணா திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில்,ராமராக ரன்பீர் கபூரும் சீதாவாக சாய் பல்லவியும் ராவணனாக யஷூம் நடிக்கிறார். இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜெய் ஸ்ரீராம் பெயரை சாய் பல்லவி அவமதித்துவிட்டதாகவும் அவர் சீதாவாக நடிக்கக் கூடாது என்றும் BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக்கை சிலர் வைரலாக்கி வருகிறார்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.