NEWS

விஜயை தொடர்ந்து அரசியல் பயணமா?... நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படுத்திய சினிமா ஆசை!

நடிகர் சிவகார்த்திகேயன் அரசியலில் நுழைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பதில் தெரிவித்துள்ளார். கோவை - பாலக்காடு சாலை கோவைப்புதூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமரன் திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ஒளிபரப்பபட்டது. தொடர்ந்து படம் குறித்து சிவகார்த்திகேயன் மாணவர்களிடம் உரையாடினார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய சிவகார்த்திகேயன், “ஆர்மி உடையை கடைசியாக போடும் போது என்னுடைய நினைவாக வீட்டு கொண்டு சென்றுவிட்டேன்” எனவும் “உடையை விட முகுந்த் என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடித்தது” என்றும் கூறினார். ஆர்மி உடை அணிந்த பிறகு சின்ன, சின்ன மாற்றங்கள் எனக்குள் வந்துள்ளது என்றும் தெரிவித்தார். காமெடி, கலாய்ப்பது என்பது கூடவே பிறந்து விட்டது என்றும், படபிடிப்பு சீரியசாக இருக்கும்போது நான் கொஞ்சம் தான் ஜாலியாக இருப்பேன் என்றும், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னர் முதலில் மன ரீதியாக தன்னை தயார்படுத்தி கொண்டதாகவும், பின்னர் உடலை தயார் செய்தேன் என்றும் வெளிப்படுத்தினார். மேலும், உடல் வலிமை இருந்தால் தான், இந்த படத்தில் நடிக்க சரியாக இருக்க முடியும். இந்த படத்திற்காக ஜிம் சென்றதில் உடலில் கட்டி கட்டியாக உள்ளது என்று சிவகார்த்திகேயன் கூறினார் . முகுந்த் எங்கு வேலை பார்த்தார் என பார்த்து பார்த்து அங்கு தான் சூட்டிங் செய்தோம். அங்கு ஒரு சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது என்றும் ஷூட்டிங் சம்பவங்களை நினைவு கூர்ந்தார். மேலும், விஜய் டிவியில் இருக்கும் போது சாய் பல்லவியை தெரியும் என்றாலும், படத்தின்போதுதான் மிகவும் தெரியும். சாய் பல்லவி அண்ணா என்று செல்லியது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்கவில்லை என்றார். முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும். ஆனால் இதை பற்றி படமாக தெரிய வேண்டும் என்பதால் எடுத்துள்ளோம் என்றார். Also Read | உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல யூடியூபர் தம்பதி.. நெகட்டிவ் கமெண்ட்டுகள் காரணமா.. நடந்தது என்ன? தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் அரசியலுக்கு வந்தது போன்று நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சினிமாவில் நான் பண்ண வேண்டிய ரோல் அதிகம் உள்ளது. எனவே அரசியலுக்கு வருவதைப் பற்றி பின்னர் பார்ப்போம்” என்றார். மாணவர்கள் நிகழ்ச்சியின் போது உங்களை பார்த்து துப்பாக்கி போன்று சிம்பல் காண்பித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “கோட் படத்தில் சின்னதாக துப்பாக்கியை காட்டி ஒரு ரோல் செய்தேன். அதை தான் தனது கைகளை உயர்த்தி, மாணவர்கள் என்னிடம் காண்பித்து கேட்டார்கள்” என்றார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.