NEWS

தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!

நடிகர் விஜய் சினிமாத்துறையில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து பிறகு நேற்று கட்சியின் முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். முன்னதாக கட்சியின் பெயர் காரணமும், கொடி விளக்கமும் மாநாட்டில் விளக்கப்படும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார். அதன்படி கட்சியின் கொடி, பெயர் குறித்தெல்லாம் விளக்கம் அளிக்கப்பட்டது. கட்சியின் கொடி குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். கொடி நிறம்: அந்த விளக்கத்தில், நம் கொடியில் மேலும் கீழும் அடர் ரத்த சிவப்பு நிறம் அதாவது மெரூன் நிறம் இருக்கிறது. பொதுவாக சிவப்பு என்றால் புரட்சியின் குறியீடு. அந்த சிவப்பு குடும்பத்தில் வரும் மெரூன் நிறம் அனைவரின் கவனத்தையும் பளீச் என்று ஈசியா ஈர்க்கும் ஒரு நிறம். இது கட்டுப்பாட்டையும், பொறுப்புணர்வையும், சிந்தனைத்திறனையும், செயல் தீரத்தையும் சொல்லும் நிறம். நம்கொடியின் நடுவில் இருப்பது மஞ்சள் நிறம். இது மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத் தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றலைத் தூண்டவும், இலக்கை நோக்கி உறுதியுடன் ஓடவும் வைக்கும் நிறம். வாகை பூ: தொடர்ந்து கட்சிக் கொடியில் இருக்கும் வாகை பூ குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வெற்றியை ஒரு சுய ஒழுக்கமாகவே முன்னெடுக்கப்போகும் தவெக கொடியில் இடம் பெற்றிருக்கும் ஒரு பூ தான் மாபெரும் வெற்றிக் குறியீடான வாகைப் பூ. போருக்குப் போயிட்டு வெற்றியோட திரும்பும் மன்னனும் அவனோட படையும் வாகைப் பூ சூடி வந்தார்கள் எனும் வர்ணனையை நாம் செய்யுள்களில் படித்திருக்கிறோம். ஆனால், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்குப் போகும்போதே வெற்றியை முன்கூட்டியே கணித்து வாகைப் பூ சூட்டிக்கொண்டு போனார் என சொல்கிறார்கள். வாகை என்றாலே வெற்றி என ஒரு அர்த்தம் இருக்கிறதாம். அப்படியான வெற்றியில் அரச வாகைக்கான அரசனின் வெற்றி என்று அர்த்தம். ஆனால், இங்கு நம் தமிழக வெற்றிக் கழகக் கொடியில் இருக்கும் வாகைப் பூ மக்கள் வாகைக்கானது. அதாவது, நம் மக்களின் வெற்றிக்கானது. இன்னும் சரியாக சொன்னால் இந்த மண்ணின் வெற்றியை சொல்கிறது. இதையும் படியுங்கள் : தமிழக வெற்றிக் கழகத்திற்கு அந்த பெயர் வைக்க என்ன காரணம்? - முழு விளக்கம் இதோ! யானை: பிறகு யானை. மிகப்பெரிய பலம் குறித்து சொல்ல வேண்டும் என்றால் யானை பலம் என்று சொல்வார்கள். தன் நிறத்திலும் குணத்திலும் உருவத்திலும் உயரத்திலும் எப்பவுமே தனித்தன்மை கொண்டது யானை. அதிலும் குறிப்பாக போர் யானை தன்னிகரற்றது. போர்த் தந்திரம் பழகிய யானைகள் எதிரிகளோட தடைகளையும் படைகளையும் சுத்தி வளைத்து துவம்சம் செய்வதில் கில்லாடிகள். தும்பிக்கையை மேல் தூக்கிப் பிளிறிக்கொண்டு ஓடி வந்து, தன் முன்னங்கால்களைத் தூக்கி, எதிரிகளை போர்க்களத்தில் பீதியடைய வைத்து பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறிக்கொண்டு ஓட வைக்கும். அப்படி போர்முனையில் இருக்கும் பலமான இரண்டு போர் யானைகள்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருக்கிறது. நட்சத்திரங்கள்: வாகைப்பூவைச் சுற்றி நாம் வென்றெடுக்க வேண்டிய நமது செயல்திட்டங்களை சொல்லும் வகையில் 28 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அந்த நட்சத்திரங்கள் பச்சை மற்றும் நீல வண்ணங்களில் அமைத்திருக்கிறோம். இது நாம் கட்டமைக்கப் போகும் சமூக நல்லிணக்க அமைதிப் பூங்காவை குறிக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.