டேப்லெட் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. உங்கள் வேலை, விளையாட்டு அல்லது பிற தேவைகளின் மையமாக இருக்கும் உங்கள் டேப்லெட்டில் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்துவது அவசியம். நீங்கள் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தாலும் அல்லது பயணத்தின்போது வேலை செய்தாலும் பேட்டரி சரியாக இருந்தால்தான் உங்களால் எளிதாக பயன்படுத்த முடியும். இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஏற்றவாறு உங்கள் டேப்லெட்டின் பேட்டரி ஆயுளை மேம்படுத்துவதற்கான மேம்பட்ட நுட்பங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். ஆப்ஸ்களை சரிபார்க்கவும் உங்கள் டேப்லெட்டில் பேக்ரவுண்ட் ஆப்ஸ் செயல்பாடுகள் பேட்டரி கில்லர்களாக இருக்கலாம். எந்தெந்த ஆப்ஸ் பேக்ரவுண்ட்டில் இயங்குகிறது என்பதை தவறாமல் சரிபார்த்து, உங்களுக்குத் தேவையில்லாதவற்றை நீக்கவும். ஆண்ட்ராய்டு டேப்லெட்களில், ‘பேட்டரி யூசேஜ்’ அம்சத்தைப் பயன்படுத்தி, பவர்-ஹங்கிரி ஆப்ஸை அடையாளம் காணவும். iOS சாதனங்களுக்கு, செட்டிங் சென்று ‘பேட்டரி’ என்ற ஆப்ஷனுக்கு சென்று நிர்வகிக்கவும். பேட்டரி சேவர் மோடை பயன்படுத்தவும் பெரும்பாலான டேப்லெட்டுகள் பயன்பாட்டு நேரத்தை நீட்டிக்க “பேட்டரி சேவர் மோட்” அம்சத்தை கொண்டிருக்கின்றன. இது பேக்ரவுண்ட் ஆப்ஸ் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றன மற்றும் பேட்டரியை சேமிக்க செயல்திறனை சிறிது குறைக்கின்றன. சார்ஜ் குறைவாக இருக்கும்போது பேட்டரி சேவர் மோடை செயல்படுத்துவது முக்கியமானது. சாப்ட்வேரை அப்டேட் செய்யவும் சாப்ட்வேர் அப்டேட்டுகள் பெரும்பாலும் பேட்டரி பவரை சிறப்பாக நிர்வகிக்க உதவும். உங்கள் டேப்லெட்டின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் ஆப்ஸ்களை அப்டேட் செய்வது செயல்திறனை அதிகரிக்க, பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி தேவையற்ற ஆப்ஸ்களால் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்வதன் மூலம் பேட்டரி செயல்திறனை மேம்படுத்துகிறது. கனெக்டிவிட்டி அம்சத்தை மேம்படுத்தவும் வைஃபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்ற வயர்லெஸ் இணைப்பு அம்சங்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் பேட்டரி குறையக்கூடும். பேட்டரி ஆயுளை சேமிக்க, பயன்பாட்டில் இல்லாதபோது இந்த வயர்லெஸ் இணைப்புகளை நீக்கவும். கூடுதலாக ப்ளூடூத், ஏரோபிளேன் மோட் (Airplane Mode) உள்ளிட்ட ஆப்ஷன்களையும் ஆன் செய்து வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.மேலும் உங்கள் ஸ்க்ரீன் பிரைட்னஸை குறைத்து வைத்துக் கொள்வதும் உங்கள் பேட்டரி அளவை நிர்வகிக்க உதவும். இதையும் படிக்க: OLED டிஸ்ப்ளே.. இன்பினிக்ஸ் இன்புக் ஏர் ப்ரோ பிளஸ் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்! - சிறப்பம்சங்கள் என்னென்ன? அதிக வெப்பநிலையை தவிர்க்கவும் மிதமான வெப்பநிலையில் பேட்டரிகள் சிறப்பாக செயல்படும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது பயன்படுத்தினால் காலப்போக்கில் பேட்டரி ஆயுளை மோசமாக்கும். பேட்டரியை சீராக பராமரிக்க, உங்கள் டேப்லெட்டை நேரடி சூரிய ஒளியில் வைப்பதை தவிர்க்கவும். இந்த உத்திகளை செயல்படுத்துவது உங்கள் டேப்லெட்டின் பேட்டரி ஆயுளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும். பேட்டரி பவரை திறம்பட நிர்வகிப்பதன் மூலம், அடிக்கடி சார்ஜ் செய்யும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம். None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.