NEWS

விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?

விளையாட்டு மைதானத்தில் பபுள்கம் மெல்வது வீரர்களின் கவனம் மற்றும் அவர்களின் ரியாக்‌ஷனை மேம்படுத்த உதவுகிறது என்று அறிவியல் தெரிவிக்கிறது. பொதுவாக விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டின்போது பபுள்கம் மெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் இதன் காரணம் குறித்து பெரிதாக பேசப்படுவதில்லை. Science ABC வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, பபுள்கம் சாப்பிடுவதால் வாயில் உள்ள சுவை மற்றும் தாடை இயக்கத்தை உணரும் உணர்ச்சிகள் சுறுசுறுப்பாகி மூளை செயற்பாட்டை தூண்டுகின்றன. இதனால் மூளைக்குத் தகவல்கள் வேகமாக அனுப்பப்பட்டு, வீரர்களின் செயல்பாடு மற்றும் கவனம் மேம்படுகிறது. மூளைச் செயல்பாடு அதிகரிக்கும் போது, அதற்கு அதிக இரத்தம் தேவைப்படும். இதற்கு பதிலளிக்க, இதயம் வழக்கத்தை விட வேகமாக துடித்து, மூளை மற்றும் தசைகளுக்கு அதிக இரத்தத்தை வழங்குகிறது. இதன் மூலம், வீரர்கள் உடனடி ரியாக்‌ஷன்களுடன், மைதானத்தில் சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்துடன் செயல்பட முடிகிறது. இதையும் படிக்க: “இன்னும் சில ஆண்டுகள்”… தோனி கொடுத்த ஹின்ட்… உற்சாகத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம்! உச்ச கட்டப் போட்டிகளில் பபுள்கம் மெல்வது வீரர்களுக்கு அதிகமான கவனம் மற்றும் அதிவேக ரியாக்‌ஷன்களை மேம்படுத்த உதவுகிறது. எனவே, பபுள்கம் மெல்வது வெறும் பழக்கமாக இல்லாமல், ஒரு திறமையான திட்டமாக விளங்குகிறது. இது வீரர்களின் உடல் மற்றும் மனச் சுறுசுறுப்பை தக்க வைத்திருக்க உதவுகிறது. இன்னும் சொல்வதென்றால், பபுள்கம் மெல்வது விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் ஒரு அறிவியல் ஆதாரத்துடன் கூடிய பழக்கமாகும். பபுள்கம் சாப்பிடுவதன் மூலம், வீரர்களுக்கு மன உறுதி, உடல் தயார் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனை பெற முடிகிறது. மேலும், பபுள்கம் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். பபுள்கம் சாப்பிடும் செயலில் செரடோனின் என்ற மனஅமைதியை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரக்கிறது, இது மூளையினை தளர்த்தி கவனத்தையும் நிதானத்தையும் மேம்படுத்துகிறது. அதிக அழுத்தமான சூழலில் இது வீரர்களுக்கு முக்கியமான ஆதரமாக இருக்கும். ஏனெனில் மன அழுத்தம் குறைவால் அதிக செயல்திறனை வெளிப்படுத்த முடியும். மேலும், பபுள்கம் வாயில் ஈரப்பதத்தை பராமரித்து தாகத்தை குறைக்க உதவுகிறது. அதிவேக விளையாட்டுகளின் போது ஒவ்வொரு முறையும் தண்ணீர் அருந்த முடியாத சூழலில், பபுள்கம் சாப்பிடுவதன் மூலம் வாயின் ஈரப்பதத்தை பராமரித்து, வீரர்கள் அதிக கவனத்துடன் விளையாட முடிகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.