NEWS

விஜய் ரசிகை டூ தவெக பேச்சாளர்... தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதில் விஜய் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் விவாதப் பொருளாகி உள்ளன. நேற்றைய மாநாட்டில் கவனம் ஈர்த்தவர் மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண். ‘தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்’ என ஆரவாரத்தோடு அந்தப் பெண் தொகுத்து வழங்கியது கவனம் ஈர்த்தது. மாநாட்டை சிறப்பாக தொகுத்து வழங்கியதற்காக அவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் அவரின் குரலை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். யார் அவர்?: தவெக மாநாட்டை தொகுத்து வழங்கிய அந்தப் பெண்ணின் பெயர் துர்கா தேவி. 28 வயதாகும் அவரின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி. கணவரின் ஊர் மதுரை என்பதால் தற்போது மதுரையில் தங்கி இருக்கிறார். துர்கா தேவி, தனியார் கல்லூரி விரிவுரையாளரும்கூட. இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருக்கிறதாம். அதற்காக விடுமுறையில் இருந்து வரும் அவருக்கு தவெக மாநாட்டில் தொகுப்பாளாராக வாய்ப்பு கிடைக்க அதனை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார். துர்கா தேவிக்கு சிறுவயதில் இருந்தே கட்டுரை, கவிதை போன்ற போட்டிகளில் கலந்துகொள்வதில் ஆர்வம் அதிகமாம். அதோடு விஜயின் ரசிகையாகவும் இருந்தவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மக்கள் இயக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய துர்கா தேவியை, சமீபத்தில் கட்சி துவங்கிய பிறகு கழகப் பேச்சாளராக அறிவித்துள்ளது தவெக தலைமை. இந்த உற்சாகத்தில் இருந்தவருக்கு அடுத்த வாய்ப்பாக தவெக மாநாட்டு வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் இரண்டு நாட்கள் முன்புதான் தொடர்புகொண்டு மாநாட்டை தொகுத்து வழங்கவுள்ள விஷயத்தை துர்கா தேவியிடம் பகிர்ந்துள்ளார் அக்கட்சியின் நிர்வாகிகள். மாநாட்டை தொகுத்து வழங்கியதை பார்த்த விஜய், இரண்டு முறை துர்கா தேவியை பார்த்து ‘ரொம்ப நல்லா பேசுனீங்கம்மா’ என்று பாராட்டினாராம். சமீபத்தில் தான் துர்கா தேவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை தனது அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்போது ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளார் துர்கா தேவி. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.