NEWS

Tamil Live Breaking News: கேரளாவில் பட்டாசு வெடித்து தீ விபத்து: 150 பேர் காயம்; 10 பேர் கவலைக்கிடம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள வீரர்காவு என்ற கோயிலில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 150 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அனைத்து பட்டாசுகளை ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தனர் காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். #JUSTIN கேரளா, காசர்கோடு மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 154 பேர் காயம் #Kerala #Kasarkodu | pic.twitter.com/mVtRShDmmz தமிழ்நாட்டில் இன்று (29.10.2024) புதன்கிழமை வழக்கமான மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்தடை ஏற்படும் இடங்கள் : சென்னை வடக்கு: திருப்பதி நகர், அஞ்சுகம் நகர், அன்னை சத்தியநகர், சீனிவாசா நகர், திருமலை நகர், ஸ்ரீநகர் காலனி வஜிரவேல் நகர், பிரபு தெரு, RH சாலை, அண்ணல் காந்தி தெரு, பாலாஜி நகர், தணிகாசலம் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்: புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர், பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் ரத்து செய்யப்படும். திருவாரூர்: சர்வமான்யம், நீடாமங்கலம், பச்சகுளம், ஆர்.பி.சாவடி ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி கம்பீரமாக சாலையை கடக்கும் காட்சி வெளியாகியுள்ளது. #JUSTIN உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி கம்பீரமாக சாலையை கடக்கும் காட்சி #Ooty #Tiger #Forest | pic.twitter.com/rilpSqE7Cj #JUSTIN நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம் #Tirunelveli #Nellaiyappar #GandhimathiAmman | pic.twitter.com/gcPQgpbCZQ None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.