NEWS

“தவெக தோழர்கள் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது” - தொண்டர்கள் மரணம் தொடர்பாக விஜய் இரங்கல்!

விஜய் தவெக தோழர்கள் நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த 6 நிர்வாகிகள் மரணம் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் JK.விஜய்கலை, திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் வசந்தகுமார், கழகத் தோழர் பாரிமுனை, சென்னை ரியாஸ், கழகத் தோழர், பாரிமுனை உதயகுமார், மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். முன்னதாக, விபத்தில் சிக்கி உயிரிழந்த தவெக திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் உடல்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக வெற்றிக்கழக மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் அணிவகுத்து சென்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக வெற்றிக்கழக திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் கலை உள்ளிட்ட ஏழு பேர் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது விபத்தில் சிக்கியதில் சீனிவாசன் மற்றும் கலை உயிரிழந்துள்ளனர். சீனிவாசன் மற்றும் கலை ஆகியோரின் உடல்கள் இன்று காலை திருச்சி கொண்டுவரப்பட்டன. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் உயிரிழந்த திருச்சி தெற்கு மாவட்ட துணை தலைவர் கலை உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கலை உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். கலை உடலை பார்த்தவாறு கதறி அழுதபடி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து திருச்சி பெரிய செட்டி தெருவில் உள்ள கலை அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆனந்த் கூறும்போது.., இறந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் அறிவுறுத்தலின் பேரில் நேரில் வந்து மரியாதை செலுத்தி இருப்பதாகவும். இவர்களது இழப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு என்றார். திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கலை உயிரிழப்புக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிடவில்லை எனக் கூறி கலை உறவினர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.