NEWS

உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்க விராட் கோலி... முன்னாள் வீரர் அட்வைஸ்

விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆலோசனை கூறியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியடையாத நிலையில், அந்த சாதனையை நியூசிலாந்து அணி முடிவுக்கு கொண்டுவந்தது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. 2 ஆவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைவதற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக முதல் மேட்ச்சில் 70 ரன்கள் எடுத்ததை தவிர்த்து 3 இன்னிங்ஸ்களில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் விராட் கோலி குறித்து கிரிக் பஸ் தளத்திற்கு முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி தடுமாறி வருகிறார். 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் 3 இன்னிங்ஸ்களில் மிக குறைந்த ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். குறிப்பாக ஸ்பின்னர்கள் விராட் கோலியை அச்சுறுத்தியுள்ளனர். எங்கே தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து, மீண்டும் அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். ஒரு நட்சத்திரமாக நீங்கள் மாறி விட்ட பின்னர், புதிய சவால்களையும் நீங்கள் ஏற்க வேண்டும். கடந்த 2-3 ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை அச்சுறுத்தியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார். தமிழ் செய்திகள் / விளையாட்டு / கிரிக்கெட் / உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்க விராட் கோலி... முன்னாள் வீரர் அட்வைஸ் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்க விராட் கோலி... முன்னாள் வீரர் அட்வைஸ் விராட் கோலி இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி தடுமாறி வருகிறார். 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் 3 இன்னிங்ஸ்களில் மிக குறைந்த ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 29, 2024, 7:14 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Musthak தொடர்புடைய செய்திகள் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆலோசனை கூறியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியடையாத நிலையில், அந்த சாதனையை நியூசிலாந்து அணி முடிவுக்கு கொண்டுவந்தது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நியூசிலாந்து அணி முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. விளம்பரம் 2 ஆவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைவதற்கு பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டமே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக முதல் மேட்ச்சில் 70 ரன்கள் எடுத்ததை தவிர்த்து 3 இன்னிங்ஸ்களில் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் விராட் கோலி குறித்து கிரிக் பஸ் தளத்திற்கு முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி தடுமாறி வருகிறார். 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் 3 இன்னிங்ஸ்களில் மிக குறைந்த ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். குறிப்பாக ஸ்பின்னர்கள் விராட் கோலியை அச்சுறுத்தியுள்ளனர். எங்கே தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து, மீண்டும் அவர் ரன்களை குவிப்பார் என்று நம்புகிறேன். விளம்பரம் இதையும் படிங்க - “இன்றைய டெஸ்ட் கிரிக்கெட்..” - பேஸ்பால் கிரிக்கெட் பற்றி தோனி சொன்ன பதில் ஒரு நட்சத்திரமாக நீங்கள் மாறி விட்ட பின்னர், புதிய சவால்களையும் நீங்கள் ஏற்க வேண்டும். கடந்த 2-3 ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் விராட் கோலியை அச்சுறுத்தியுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன் என்று கூறியுள்ளார். விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: cricket , Latest News First Published : October 29, 2024, 7:14 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.