NEWS

OLED டிஸ்ப்ளே.. இன்பினிக்ஸ் இன்புக் ஏர் ப்ரோ பிளஸ் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

இன்பினிக்ஸ் நிறுவனம் தற்போது 14 இன்ச் அளவு கொண்ட புதிய லேப்டாபை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லேப்டாப்பை பற்றி விரிவாக பார்ப்போம். இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ ஃபிளிப் 5G மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன், இன்புக் ஏர் ப்ரோ பிளஸ் லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்புக் ஏர் ப்ரோ பிளஸ் லேப்டாப் ஆனது 4.5 மிமீ திக்நெஸ் மற்றும் 1 கிலோ எடை கொண்டுள்ளது, இது இந்த ஆண்டில் 14 இன்ச் OLED பிரிவில் கிடைக்கக்கூடிய மிக மெல்லிய மற்றும் லைட் வெயிட் ஆன லேப்டாப்களில் ஒன்றாக உள்ளது. அலுமினியம் மற்றும் மெக்னீசியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த லேப்டாப் பிரஷ்டு மெட்டல் ஃபினிஷுடன் வருவதால் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. சிறப்பம்சங்கள் என்னென்ன? : இன்பினிக்ஸ் இன்புக் ஏர் ப்ரோ பிளஸ் லேப்டாப்பில் 14 இன்ச் 2.8K OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2880 x 1800 பிக்சல்ஸ் ரெசலூஷன் மற்றும் 16:10 அஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே 120Hz ரெப்பிரேஷ் ரெட் ஆதரிக்கிறது மற்றும் 0.5ms நேரத்தில் விரைவாக பதில் அளிக்கிறது. இது 440 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டை கொண்டுள்ளது. மேலும், இதில் sRGB மற்றும் DCI-P3 color gamuts டெக்னாலஜி கொண்டுள்ளது, எனவே இது மிகவும் துல்லியமான மற்றும் கிரிஸ்பான வீடியோ தரத்தை வழங்குகிறது. இது இன்டெல் கோர் i5- 1334U பிராசசர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. மேலும் இது 16GB of LPDDR4X 4267MHz ரேம் மற்றும் 512GB PCIe Gen 3 SSD ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது விண்டோஸ் 11 மூலம் இயங்குகிறது மற்றும் கீபோர்ட்டில் AI உடன் இயங்கும் கோ-பைலட் பட்டன் சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் லேப்டாப்பில் 57Wh பேட்டரி உள்ளது. 1080 பிக்சல் கொண்ட வீடியோக்களைப் பார்க்கும்போது கூட பேட்டரி 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. USB டைப்-சி சார்ஜிங் ஆதரவுடன், இந்த லேப்டாப் 65 Watt வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. விலை எவ்வளவு?: இன்ஃபினிக்ஸ் பிராண்டின் இந்த லேப்டாப்பின் விலை ரூ. 49,990 ஆகும். இந்த லேப்டாப்பின் விற்பனை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி முதல் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்து வருகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.