TAMIL-NADU

Tamil Nadu Rains: மிரட்டும் கனமழை : அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? முழு விபரம்!

தமிழ்நாடு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை துறைகளான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, உள்ளாட்சி நிர்வாகத்துறைகள், பால்வளத்துறை, குடிநீர்வழங்கல் துறை உள்ளிட்டவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத்துறை, காய்கறிகள், இதர அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து, மாநகரப் போக்குவரத்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில், விமான நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையால், சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்த பணியாளர்களைக் கொண்டோ, வீட்டில் இருந்தோ பணியாற்ற தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இதேபோல, கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார். சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தொடர் மழையால் கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். வண்டலூர் உயிரியியல் பூங்கா தொடர் மழை காரணமாக வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை மழையில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளையும் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். உயர்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், உயர்நீதிமன்றத்துக்கும் தலைமைப் பதிவாளர் அல்லி விடுமுறை அறிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.