TAMIL-NADU

தீபாவளிக்கு பருப்பு, பாமாயில் விநியோகம் எப்படி?... அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட தகவல்!

“தீபாவளிக்கு பருப்பும், பாமாயிலும் தங்கு தடையின்றி வழங்கப்படும்” என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று விடுத்த அறிக்கையில், “ரேஷன் கடைகளில் தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சரிவர துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை. மூன்று மாதங்கள் யாருக்கும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. கடந்த பல மாதங்களாக, சில நாட்கள் மட்டுமே துவரம் பருப்பு கிடைக்கிறது. வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 200 வரை விற்கப்படுகிறது. இதனால், ரேஷனில் கிலோ ரூ. 30க்கு கிடைக்கும் துவரம் பருப்பை நம்பியே ஏழை, நடுத்தர மக்கள் உள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 14 நாட்களே இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக 20,000 டன் துவரம் பருப்பு ஆர்டர் செய்யப்பட்டதாகவும், அதில் 3,473 டன் மட்டுமே சப்ளை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அரசின் அலட்சியத்தால் மீதமுள்ள 16,527 டன் துவரம் பருப்பு உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளிக்கு முன்பாக துவரம் பருப்பு பெற தகுதியான 1 கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் துவரம் பருப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களை மிக கடுமையாகப் பாதிக்கும். எனவே, திமுக அரசு தனது தூக்கத்தை கலைத்து, போர்க்கால அடிப்படையில் துவரம் பருப்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுபோல, தீபாவளிக்கு முன்பாக பாமாயில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கிடைப்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உறுதி செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்திருந்தார். Also Read | Chennai Rain: சென்னையில் நாளை மழை எப்படி இருக்கும்?… வானிலை ஆய்வு மையம் விளக்கம்! வானதி சீனிவாசனின் இந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தீபாவளிக்கு பருப்பும், பாமாயிலும் தங்கு தடையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் மாத துவரம் பருப்பு ஒதுக்கீடான 20,751 மெட்ரிக் டன்னில் 9,461 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் கொடுத்துள்ளார். இதேபோல், 20,408,000 பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97,83,000 பாக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.