TREND

உலக அழகி போட்டியில் கலக்கிய 80 வயது மூதாட்டி... உலகையே ஆச்சரியப்பட வைத்த சம்பவம்!

அழகுப் போட்டிகள் நீண்ட காலமாக இளம் பெண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகில், சோய் சூன்-ஹ்வா என்கிற 80 வயது மூதாட்டி கொரியாவின் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்று உலகையே திகைக்க வைத்துள்ளார். தென் கொரியாவைச் சேர்ந்த 80 வயதான மாடல் அழகி, கொரியாவின் பிரபஞ்ச அழகி போட்டியில் அதிக வயதுடைய போட்டியாளர் என்ற பெயருடன் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். குறிப்பாக இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர் தனது பேரக் குழந்தைகள் போல் இருக்கும் இளம் பெண்களுடன் போட்டியிடுகிறார் என்பது தான். ஆனால் சோய் சூன்-ஹ்வாவைப் பொறுத்தவரை, அவரது வயது வெறும் எண் தான், மேலும் கருணை, அழகு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றுக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிரூபிக்க அவர் தயாராக இருக்கிறார். இதையும் படிக்க: உங்களின் கால் விரல்கள் இந்த வடிவத்தில் இருக்கா..? அப்ப இந்த அதிசய குணங்களை தெரிஞ்சிக்கோங்க! “நான் உலகை திகைக்க வைக்க விரும்புகிறேன்,” என்று சோய், போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக சிஎன்என்-ல் பேசும்போது கூறினார். “80 வயது முதியவர் எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மக்கள் கேட்பார்கள். அந்த உடலை அவள் எப்படி பராமரித்தார்? அவருடைய ரகசியம் என்ன?’’ போன்ற கேள்விகளும் அவர்களுக்கு எழும்.” என அவர் கூறினார். சோய் தனது ஷைனிங்கான வெள்ளை முடி மற்றும் முழு நம்பிக்கையுடன், 80 க்குப் பிறகு தனது வாழ்க்கை மிகவும் துடிப்பானதாக இருக்கும் என்பதைக் காட்ட உறுதியாக இருக்கிறார். “வெளியில் அழகாக இருப்பது முக்கியம், ஆனால் நீங்கள் உங்கள் மனதிலும் நிம்மதியாக இருக்க வேண்டும், மற்றவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று சோய் CNN இடம் கூறினார். “மேலும், நீங்கள் ஒரு நேர்மறையான சிந்தனையாளராக இருக்க வேண்டும். ஏனெனில், இந்த நாட்களில் பலர் எதிர்மறையாக உள்ளனர்". என்றும் அவர் கூறியுள்ளார். இதையும் படிக்க: காலிங் பெல் அடித்த டீனேஜ் பெண்.. கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பெங்களூருவில் புதிய மோசடி 1952 ஆம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முன்னரே, சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பிறந்த சோய், மிஸ் யுனிவர்ஸ் கொரியாவில் கிரீடத்தை வென்றிருந்தால் சரித்திரம் படைத்திருப்பார். இந்த நவம்பரில் மெக்சிகோ சிட்டியில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தென் கொரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தைப் பெற்று, போட்டியின் 73 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் வயதானவராக பங்கேற்கிறார். செப்டம்பர் 24 அன்று, கிம் சே-வோன், மிஸ் யுனிவர்ஸ் கொரியாவாக முடிசூட்டப்பட்டார். முதன்முறையாக வயதுக் கட்டுப்பாடுகளை நீக்கி,அனைத்து வயதுப் பெண்களும் பங்கேற்கும் வகையில் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கான திருப்புமுனையை இந்த ஆண்டு ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியை நவீனமயமாக்குவதற்கான இந்த முடிவு, கடந்த ஆண்டு கர்ப்பிணி, திருமணமான மற்றும் விவாகரத்து பெற்ற போட்டியாளர்கள் மீதான தடைகளை நீக்கியதைத் தொடர்ந்து, ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் முயற்சியாக இது பின்பற்றப்படுகிறது. கடன்களைத் தீர்க்க தனது 72 வயதில் மாடலிங் செய்யத் தொடங்கிய சோய், வயதுக் கட்டுப்பாடுகளை நீக்குவதை ஒரு அடையாளமாகக் கண்டார். “தற்போது விதிகள் மாறியபோது, ​​​​’தான் ஏன் போட்டியிடக் கூடாது? நான் வெற்றி பெற்றாலும் இல்லாவிட்டாலும், இது எனக்கு ஒரு வாய்ப்பு,” என்று அவர் CNN இடம் கூறியுள்ளார். இதையும் படிக்க: பாம்பை பார்த்த உடன் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இத மட்டும் செய்யாதீங்க சோய் சூன்-ஹ்வாவின் பங்கேற்பு பலரையும் தூண்டியுள்ள நிலையில், அவர்களின் கனவுகளைத் தொடர இது ஒருபோதும் தாமதமாகாது என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.