TREND

வரலாற்றில் மிக மோசமான நாள் எது? - 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு தெரியுமா?

ஒரு இயற்கை பேரழிவு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்களைப் பலி கொண்டால் அது எப்படிப்பட்ட பேரழிவாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்படியான பேரழிவு ஏற்பட்டபோது உலகின் மக்கள்தொகை இன்று இருப்பதை விட சுமார் 5% மட்டுமே இருந்தது என்றால், அழிவின் அளவை எண்ணிப் பாருங்கள் எவ்வளவு பெரிய துயரம் என்று. அது எங்கே.. எப்போது நிகழ்ந்தது. சீனா தனது வரலாறு முழுக்கப் பேரிடர்களைத் தாங்கியே வந்துள்ளது. சீனா சந்தித்த மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்று ஷாங்க்சி பூகம்பம். இந்தப் பூகம்பம் 1556 ஜனவரி 23 அன்று வடமேற்கு சீனாவின் ஷான்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களில் ஏற்பட்டது. வரலாற்றிலேயே மிகவும் மோசமான பூகம்பம் எனும் அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் 8 என மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 8,30,000 உயிர்கள் பறிபோனது. குவியல் குவியலாக மக்கள் இறந்தனர். சீனாவில் பேரரசு ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட பெரிய இயற்கைப் பேரிடராக இந்தப் பூகம்பம் பார்க்கப்படுகிறது. இந்தப் பூகம்பத்தால் சீனாவின் மொத்தப் பரப்பளவில் 621 சதுர மைல் குறைந்தது. சீனா அருங்காட்சியகத்தின் சான்றுப்படி அந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து சுமார் 8,30,000 பேர் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவுகோலானது அப்போது கணிக்கப்படவில்லை, தற்கால அறிவியலாளர்கள் தான் அதன் ரிக்டர் அளவு 8 ஆக இருக்கலாம் என்று கணித்தனர். வரலாற்றின் மோசமான பூகம்பத்தால் அக்காலக் கட்டிடங்கள், வீடுகள் என முழு நகரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடி உயிரிழப்பைத் தாண்டி, இந்தப் பூகம்பத்தின் நீண்டகால விளைவாகப் பஞ்சமும் தொற்று நோய்களும் உண்டாகின. சீன வரலாற்றில் இது ஜியாஜிங் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டது என்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. வடமேற்கு சீனாவில் உண்டான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தெற்கு கடற்கரை வரை உணர முடிந்தது எனப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த மிகப்பெரிய பேரழிவு மிங் வம்சத்தைப் பலவீனப்படுத்தியது என்றும் பதிவுகள் சொல்கின்றன. தமிழ் செய்திகள் / ட்ரெண்டிங் / வரலாற்றில் மிக மோசமான நாள் எது? - 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு தெரியுமா? வரலாற்றில் மிக மோசமான நாள் எது? - 8,30,000 உயிர்களைப் பலிகொண்ட பேரழிவு தெரியுமா? வரலாற்றின் மோசமான பூகம்பத்தால் அக்காலக் கட்டிடங்கள், வீடுகள் என முழு நகரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடி உயிரிழப்பைத் தாண்டி, இந்தப் பூகம்பத்தின் நீண்டகால விளைவாகப் பஞ்சமும் தொற்று நோய்களும் உண்டாகின. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai [Madras],Chennai,Tamil Nadu Last Updated : December 20, 2024, 11:38 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் ஒரு இயற்கை பேரழிவு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயிர்களைப் பலி கொண்டால் அது எப்படிப்பட்ட பேரழிவாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்படியான பேரழிவு ஏற்பட்டபோது உலகின் மக்கள்தொகை இன்று இருப்பதை விட சுமார் 5% மட்டுமே இருந்தது என்றால், அழிவின் அளவை எண்ணிப் பாருங்கள் எவ்வளவு பெரிய துயரம் என்று. அது எங்கே.. எப்போது நிகழ்ந்தது. சீனா தனது வரலாறு முழுக்கப் பேரிடர்களைத் தாங்கியே வந்துள்ளது. சீனா சந்தித்த மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்று ஷாங்க்சி பூகம்பம். இந்தப் பூகம்பம் 1556 ஜனவரி 23 அன்று வடமேற்கு சீனாவின் ஷான்சி மற்றும் ஷாங்க்சி மாகாணங்களில் ஏற்பட்டது. வரலாற்றிலேயே மிகவும் மோசமான பூகம்பம் எனும் அளவுக்கு ரிக்டர் அளவுகோலில் 8 என மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 8,30,000 உயிர்கள் பறிபோனது. குவியல் குவியலாக மக்கள் இறந்தனர். விளம்பரம் சீனாவில் பேரரசு ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட பெரிய இயற்கைப் பேரிடராக இந்தப் பூகம்பம் பார்க்கப்படுகிறது. இந்தப் பூகம்பத்தால் சீனாவின் மொத்தப் பரப்பளவில் 621 சதுர மைல் குறைந்தது. குளிர்காலத்தில் அதிக கொலஸ்ட்ராலின் வெளிப்படையான 8 அறிகுறிகள்.! மேலும் செய்திகள்… சீனா அருங்காட்சியகத்தின் சான்றுப்படி அந்த நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்து சுமார் 8,30,000 பேர் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவுகோலானது அப்போது கணிக்கப்படவில்லை, தற்கால அறிவியலாளர்கள் தான் அதன் ரிக்டர் அளவு 8 ஆக இருக்கலாம் என்று கணித்தனர். வரலாற்றின் மோசமான பூகம்பத்தால் அக்காலக் கட்டிடங்கள், வீடுகள் என முழு நகரங்களும் இடிபாடுகளில் சிக்கியது. உடனடி உயிரிழப்பைத் தாண்டி, இந்தப் பூகம்பத்தின் நீண்டகால விளைவாகப் பஞ்சமும் தொற்று நோய்களும் உண்டாகின. விளம்பரம் Also Read | அன்று யுவராஜ்.. இன்று அஸ்வின்.. தந்தையால் தர்மசங்கடத்தை சந்திக்கும் கிரிக்கெட் வீரர்கள்! சீன வரலாற்றில் இது ஜியாஜிங் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மிங் வம்சத்தின் ஜியாஜிங் பேரரசரின் ஆட்சியின் போது ஏற்பட்டது என்பதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. வடமேற்கு சீனாவில் உண்டான இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தெற்கு கடற்கரை வரை உணர முடிந்தது எனப் பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த மிகப்பெரிய பேரழிவு மிங் வம்சத்தைப் பலவீனப்படுத்தியது என்றும் பதிவுகள் சொல்கின்றன. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: China , Disasters , earthquake , Latest News First Published : December 20, 2024, 11:38 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.