TREND

இணையத்தில் ட்ரெண்டாகி வரும் Flying Naked வீடியோக்கள்… அதற்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கோங்க…

சமூக வலைதளங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில பாடல்கள், சில லைஃப் ஸ்டைல் அம்சங்கள், வீடியோக்கள் ட்ரெண்டாகி வருவதைப் போன்று இணையத்தில் தற்போது Flying Naked என்ற லைஃப் ஸ்டைல் ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக விமான பயணிகள் மத்தியில் இந்த Flying Naked என்ற அம்சம் அதிகம் பேசப்படுகிறது. Flying Naked என்ற ஆங்கில சொல்லுக்கு நிர்வாணமாக பறப்பது என்ற நேரடி பொருள் இருக்கும். இதற்கு ஆடை இல்லாமல் பயணம் செய்வது என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். மாறாக ஒரு பயணி தனது பயணத்தின் போது கொண்டு செல்லப்படும் குறைந்தபட்ச உடைமைகளை இந்த Flying Naked என்ற அர்த்தம் குறிக்கிறது. மிக மிக குறைவான பொருட்களுடன் பயணம் செல்வோரை Flying Naked என்று இணையவாசிகள் அழைக்கின்றனர். இந்த முறை தற்போது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த Flying Naked டிரெண்டில் 3 அம்சங்கள் உள்ளன. முதலாவது Totally Bare என்று அழைக்கிறார்கள். இதில் பயணிகள் போன், சார்ஜர், பர்ஸ் ஆகியவற்றை மட்டுமே கொண்டு செல்லக்கூடியவர்கள். இரண்டாவது குரூப்பை Pocket People என்று அழைக்கிறார்கள். இவர்கள் Totally Bare பயணிகளுடன் தங்களுக்கு தேவையான துணிகள் அத்தியாவசிய பொருட்களை பயணத்தின் போது கொண்டு செல்லக்கூடியவர்கள். மூன்றாம் வகையினரை Delivery Crew என்று கிண்டலாக அழைக்கிறார்கள். இவர்கள் மிக அதிகமான பொருட்களுடன் பயணம் செல்வோர் ஆவர். இந்த Flying Naked டிரெண்டிங் கொஞ்சம் பழமையானது என்றாலும் அது மீண்டும் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. பயணத்தின் போது உடன் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. Totally Bare ஆக செல்பவர்கள் தங்களது உடைமைகளுக்கு எந்த வித கட்டணமும் எங்கேயும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது. ஆனால் அதிகப்படியான லக்கேஜ்களுடன் செல்லும்போது அவற்றுக்கு விமான நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கேட்கின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் லக்கேஜ் வகைக்காக சுமார் 300 கோடி ரூபாய் வரையில் விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் இந்த Flying Naked டிரெண்டிங்கின் நோக்கம் என்னவென்றால், பயணிகள் தங்களது பயணத்தின் போது மிகக் குறைந்த பொருட்களையே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை வற்புறுத்துவதாக உள்ளதென கூறுகின்றனர். தற்போது இந்த Flying Naked தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.