TREND

சர்வீஸ் சார்ஜ் இல்லை ஆனால் ரூ.10,030 பில்.. இந்திய யூடியூபரின் பதிவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு!

வாடிக்கையாளரிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதில்லை என்ற உணவகத்தின் கொள்கையைப் பாராட்டுவதற்காக இந்திய யூடியூபர் ஒருவர் உணவகத்தின் பில்லை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் தொழில்முனைவோரான இஷான் ஷர்மா, ஒரு உணவகத்தில் உணவை சாப்பிட்ட பிறகு, பெறப்பட்ட பில்-இன் புகைப்படத்தை தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டதை அடுத்து வேகமாக வைரலானது. இருப்பினும் இந்த புகைப்படம் வைரலானதிற்கு இது மட்டும் காரணமல்ல, ஒரு சாதாரண வட இந்திய உணவுக்கான மொத்த பில் ரூ.10,030 வசூலிக்கப்பட்டது என்பதற்காக. இஷான் ஷர்மா உணவக்கத்தில் சாப்பிட்ட ஐந்து உணவுகளின் பில்லின் புகைப்படத்தை ‘ரெஸ்டாரெண்ட்ஸ் டேக் நோட்’ என்ற கேப்ஷன் உடன் பதிவிட்டிருந்தார். அதில் 5 சைவ உணவு பட்டியலிடப்பட்டிருந்தது. அதில் பன்னீர் குர்ச்சான், டால் புகாரா, கஸ்தா ரொட்டி உடன் பன்னீர் மக்கானி மற்றும் புதினா பராத்தா ஆகியவை ஆகும். இந்த ஐந்து உணவுகளுக்கான மொத்த பில் தொகை ரூ.10,030 ஆக இருந்தது. ரசீதில் இருந்த இந்த பெரிய தொகைக்கு கீழே, “நாங்கள் சேவைக் கட்டணங்கள் எதுவும் வசூலிப்பத்திலை” என்று எழுதப்பட்டிருந்தது. உணவகத்தின் இந்த நடவடிக்கையை சர்மா பாராட்டி பதிவிட்டிருந்தார். ஆனால் பெரும்பாலான நெட்டிசன்கள், அவர் இந்த உணவுக்காக செலவழித்த பணத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அந்த பில்-இல் பன்னீர் குர்ச்சான் ரூ.2900, டால் புகாரா ரூ.1200, கஸ்தா ரொட்டி ரூ.375, பன்னீர் மக்கானி ரூ.2900 மற்றும் புதினா பராத்தா ரூ.1125 என்று குறிப்பிட்டிருந்தது. உணவு பில்-ஐ பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்: சர்மா ஒரு சாதாரண வட இந்திய உணவுக்கு இவ்வளவு விலை கொடுத்ததால் பல நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒரு யூசர் கூறியாதவது, பன்னீர் மக்கானி ரூ.2900, மூன்று பராத்தாவுக்கு ரூ.1125 மற்றும் ஒரு ரொட்டி ரூ.400 என்று ஒரு யூசர் சுட்டிக்காட்டினார். மற்றொரு யூசர், பன்னீருக்கு நீங்கள் செலவழித்த பணத்திற்கு, தர்பங்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெறலாம்! என்று கூறியுள்ளார். மேலும் சில நெட்டிசனைகள், சர்மா ஏற்கனவே இந்த சாதாரண உணவுக்காக இவ்வளவு பணம் கொடுத்திருந்த போதும், ​​சர்வீஸ் சார்ஜ் வசூலிக்காததற்கு பாராட்டியதற்காக கேலி செய்தனர். அதில் ஒரு யூசர் கூறியதாவது, ப்ரோ நீங்கள் ரூ. 25 பாதிப்புள்ள ரொட்டிக்கு ரூ. 375 கொடுத்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், உணவில் இவ்வளவு விலை அதிகரித்திருப்பதால், தனியாக சர்வீஸ் கட்டணம் வசூலிக்கவில்லை என்று கூறியுள்ளார். இன்னொரு யூசர் கூறியதாவது, ஒவ்வொரு உணவின் விலையிலும் அவர்கள் சேவைக் கட்டணம் உட்பட மற்ற எல்லாக் கட்டணங்களையும் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் 1 ரொட்டிக்கு ரூ.375 வசூலித்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.