TREND

ரயிலின் மேல் ஸ்டண்ட் செய்த இன்ஸ்டா பிரபலம்.. லைக்ஸ்க்காக எடுத்த விபரீத முடிவு!

இன்ஸ்ட்ராகிராம், யூடியூப் உள்ளிட் சமூக வலைதளங்களில் கவனத்தை பெறுவதற்காக, லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெறுவதற்காக பலரும் விதவிதமான வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில், ஒரு இன்ஸ்ட்ராகிராம் வ்லாகர் ஒருவர் இரயிலின் மேல் பகுதியில் அமர்ந்து ஆபத்தான முறையில் மேற்கொள்ளும் பயணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரயில் சர்ஃபிங் என்பது பங்களாதேஷ் உட்பட சில நாடுகளில் காணப்படும் ஆபத்தான சாகசமாகும். அங்கு மக்கள் அடிக்கடி நகரும் ரயில்களில் பயணிப்பதைக் காண முடியும். சமீபத்தில், ஒரு இந்தியர் அவரது வங்கதேச பயணத்தின் போது இந்த ஆபத்தான செயலை முயற்சிக்க முடிவு செய்தார். 27,000 க்கும் மேற்பட்ட பாலோயர்களுடன், நன்கு அறியப்பட்ட இன்ஸ்டாகிராம் கன்டெண்ட் கிரியேட்டரன ராகுல் குப்தா, தனது இந்த ஸ்டண்டை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அனுபவம் பொறுப்பற்றதாக இருந்தாலும், ஒரு சிலிர்ப்பான அனுபவத்தை தந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வீடியோவில், ராகுல் குப்தா எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் வேகமாக செல்லும் ரயில் எஞ்சினின் மேல்பகுதியில் படுத்திருப்பதைக் காண முடிகிறது. அதில், நிதானமாகவும், வெளிப்படையான ஆபத்தைக் கண்டு கலங்காமல் இருக்கும் ராகுல் குப்தா, இறுதியாக ரயில் தண்டவாளத்தில் வேகமாக செல்வதை வீடியோவாக பதிவுசெய்து ரீலாக பகிர்ந்துள்ளார். பின்னர், எஞ்சினின் பக்கவாட்டில் மக்களோடு மக்களாக அமர்ந்து பயணிக்கும் மற்றொரு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அவருடன் பயணிக்கும் பயணிகளும் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இன்றி இயல்பாக அமர்ந்து பயணிப்பதை அந்த வீடியோவின் மூலம் காண முடிகிறது. ரயில் தொடர்பான வீடியோக்களால் பெயர் பெற்ற ராகுல் குப்தா, தனது தீவிர மற்றும் அபத்தமான பயண வழிகளைக் காட்டும் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் ரயிலின் எஞ்சினின் கூரையின் மீது சவாரி செய்வதும், பக்கவாட்டில் தொங்குவதும் அடங்கும். அவரது இந்த வீடியோக்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன, 19 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தைக்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பல சமூக ஊடக யூசர்கள் அவரை இதுபோன்ற விஷயங்களை முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர், மேலும் பலர் நகைச்சுவையான கருத்துக்களையும் பதிவு செய்தனர். ஒரு பயனர், “சகோதரரே, நீங்கள் எடுக்கும் ரிஸ்க்கின் விலை வெறும் 34 ஆயிரம் லைக்குகளா?” என்று ஒருவரும், “இந்த மாதரி பயணம் செய்யும் விதம் சற்று சாதாரணமானது தான்” என்று மற்றொருவரும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.